உங்கள் மகனாக இருப்பது மிகவும் அதிஷ்டசாலி – தந்தையின் உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்த தீபக் சாஹர்!

Published : Dec 26, 2023, 05:19 PM IST
உங்கள் மகனாக இருப்பது மிகவும் அதிஷ்டசாலி – தந்தையின் உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்த தீபக் சாஹர்!

சுருக்கம்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர், மூளை பக்கவாதத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிந்த தனது தந்தையின் உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டியில் தீபக் சாஹர் அணியில் இடம் பெற்றார். இதில், அவர் 4 ஓவர்கள் பந்து வீசி 2 விக்கெட்டுகள் கைப்பற்றி 44 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஆனால், 5ஆவது டி20 போட்டியில் தீபக் சாஹர் அணியில் இடம் பெறவில்லை. இது குறித்து போட்டியில் டாஸ் போடும் நிகழ்வின் போது பேசிய சூர்யகுமார் யாதவ், மருத்துவ அவசர சிகிச்சைக்காக அவர் வீட்டிற்கு திரும்பியதாக கூறினார்.

South Africa vs India 1st Test: முதல் டெஸ்ட் – அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்!

ஆனால், என்ன காரணம் என்று குறிப்பிடவில்லை. தீபக் சாஹரின் தந்தை லோகேஷ் சிங் சாஹர் அலிகாரில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் அருகிலுள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி அறிந்த தீபக் சாஹர் அலிகாரில் உள்ள மித்ராஜ் மருத்துவமனைக்கு வந்தார்.

பிரசித் கிருஷ்ணா அறிமுகம், டீம் இந்தியாவில் யாரெல்லாம் இருக்காங்க? டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங்!

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரா டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தீபக் சாஹர், தனது தந்தையின் உடல்நிலையை குறித்து பிசிசிஐ மற்றும் ராகுல் டிராவிட்டிடம் தெரியப்படுத்தி, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

SA vs IND 1st Test Toss: ஈரமான அவுட்பீல்டு காரணமாக டாஸ் போடுவதில் சிக்கல் – மழை பெய்யவும் வாய்ப்பிருக்கிறதாம்!

அப்போது பேசிய அவர், உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆதலால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். நான் கிரிக்கெட் விளையாட காரணமே எனது தந்தை தான். ஆதலால், கிரிக்கெட்டை விட எனது தந்தை தான் முக்கியம் என்று 5ஆவது போட்டியில் விளையாடாமல் வந்துவிட்டேன்.  தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் எனது தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பின்பு தான் தென் ஆப்பிரிக்கா தொடரில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும். இது குறித்து தேர்வுக் குழு மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் பேசியதாக கூறியிருந்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில், தற்போது தந்தையின் உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: அப்பா உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். மீண்டும் ஒருமுறை வாழ்வில் அல்லது வாழ்க்கையோடு எப்படிப் போராடுவது என்பதைக் காட்டியிருக்கிறீர்கள். உங்கள் மகனாக இருப்பது மிகவும் அதிர்ஷ்டசாலி. நல்ல விஷயம் என்னவென்றால், நான் என் தந்தையை முதன்முதலில் தாடியில் பார்த்தேன். தந்தை குணமடைய வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

மூளை பக்கவாதத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தந்தை: தென் ஆப்பிரிக்கா தொடரிலிருந்து தீபக் சாஹர் விலகல்?

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!