
இந்தியாவில் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரையில் ஒவ்வொரு அணியும் 5 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா விளையாடிய 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா 2ஆவது இடத்திலும், நியூசிலாந்து 3ஆவது இடத்திலும், ஆஸ்திரேலியா 4 இடத்திலும் உள்ளன.
India vs England: ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகல்? உள்ளே வரும் அக்ஷர் படேல்?
கடந்த 22 ஆம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 21ஆவது லீக் போட்டி நடந்தது. தரம்சாலாவில் நடந்த இந்தப் போட்டியில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 29ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 29ஆவது லீக் போட்டி லக்னோ மைதானத்தில் நடக்க இருக்கிறது.
Hangzhou Asian Para Games 2022: 1500மீ தடகளப் போட்டியில் ராமன் சர்மா தங்கம் வென்று அசத்தல்!
இதற்கு முன்னதாக இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு 25ஆவது லீக் போட்டி நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இதில், இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது.
மேலும், இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தொடர்ந்து 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இந்தியாவிற்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தால் இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறும். ஆனால், எப்படியும் இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்று கட்டாயத்தில் இங்கிலாந்து அணி விளையாடும்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பிளேயிங் 11ல் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு!
ஆனல, இந்திய அணியோ இந்தப் போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்று விளையாடும். இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதில், எப்போதும் இடது கையில் பந்து வீசி பயிற்சி மேற்கொள்ளும் ரவீந்திர ஜடேஜா, தற்போது வலது கையில் பந்து வீசி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதே போன்று, குல்தீப் யாதவ்வும் வலது கையில் பந்து வீசி பயிற்சி மேற்கொண்டுள்ளார். மேலும், ஜஸ்ப்ரித் பும்ரா இடது கையில் பந்து வீசி பயிற்சி செய்துள்ளார். விராட் கோலி, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பந்து வீசியுள்ளார். இவர்களது வரிசையில் சுப்மன் கில்லும், சூர்யகுமார் யாதவ்வும் பந்து வீசி பயிற்சி மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக வெளிநாட்டில் நடக்கும் ஐபிஎல் ஏலம் – எப்போது நடக்கிறது தெரியுமா?