லாகூரில் இசைத்த இந்திய தேசிய கீதம்! உறைந்து போன் நின்ற ஆஸி., இங்கி. வீரர்கள்

Published : Feb 22, 2025, 03:54 PM IST
லாகூரில் இசைத்த இந்திய தேசிய கீதம்! உறைந்து போன் நின்ற ஆஸி., இங்கி. வீரர்கள்

சுருக்கம்

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மோதும் நிலையில் போட்டியின் தொடக்கத்தில் இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது. 

India National Anthem played in Lahore champions trophy 2025: ICC சாம்பியன்ஸ் டிராபி 2025ல் ஆஸ்திரேலியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே கடுமையான போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி பாகிஸ்தானின் லாகூரில் நடைபெறுகிறது. இதனிடையே திடீர்னு இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்ட சம்பவம், அங்கு கூடியிருந்த ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரு அணிகளின் தேசிய கீதத்திற்கு இடையே இந்திய கீதம் இசைக்கப்பட்டது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.

லாகூரில் திடீரென இசைக்கப்பட்ட இந்திய தேசிய கீதம்!

ஐசிசியின் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் ஒவ்வொரு போட்டியின் தொடக்கத்திலும் விளையாடும் இரு அணிகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்றைய போட்டியின் ்தொடக்கத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளின் தேசிய கீதங்கள் இசைப்பதற்கு ஆயத்தமாகினர். இந்நிலையில் திடீரென இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதால் இரு அணி வீரர்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

லாகூரில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

PREV
click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
Boxing Day Test: முதல் நாளில் சாய்ந்த 20 விக்கெட்டுகள்! ஆஸி., இங்கிலாந்து பௌலர்கள் வெறித்தனம்