அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜூரெல் அறிமுகம் – டாஸ் வென்று பவுலிங் எடுத்த டீம் இந்தியா!

By Rsiva kumar  |  First Published Jul 6, 2024, 4:50 PM IST

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.


ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. முதல் கட்டமாக இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தற்போது ஹராரேவில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பவுலிங் தேர்வு செய்தார். ஐபிஎல் 2024 தொடரில் சிறப்பாக விளையாடிய ரியான் பராக், துருவ் ஜூரெல், அபிஷேக் சர்மா, ஹர்ஷித் ராணா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

சங்கீத் நிகழ்ச்சியில் ரோகித், ஹர்திக், சூர்யகுமாருக்கு ராஜமரியாதை கொடுத்து கௌரவித்த அம்பானி குடும்பத்தினர்!

Tap to resize

Latest Videos

ஆதலால், ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இவர்கள் இடம் பெற்றிருந்தனர். ஆனால், பிளேயிங் 11ல் துருவ் ஜூரெல், அபிஷேக் சர்மா, ரியான் பராக் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கபட்டுள்ளது. இவர்கள் மூவரும் இந்தப் போட்டியின் மூலமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா:

சுப்மன் கில் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக், துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், முகேஷ் குமார், கலீல் அகமது.

ஜிம்பாப்வே:

வெஸ்லி மதேவெரே, இன்னசெண்ட் கையா, பிரையன் பென்னெட், சிக்கந்தர் ராசா (கேப்டன்), டியான் மியார்ஸ், ஜோனாதன் காம்ப்பெல், க்ளைவ் மடண்டே (விக்கெட் கீப்பர்), வெலிங்கடன் மசகட்சா, லூக் ஜாங்வே, பிளெஸிங் முசரபானி, டெண்டாய் சதாரா.

MS Dhoni Birthday: தோனியின் பர்த்டே செலிபிரேஷன் ஆரம்பம் – 100 அடி உயரத்திற்கு கட் அவுட் வைத்த ரசிகர்கள்!

டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது நேற்று முன் தினம் நாடு திரும்பியது. முதலில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய இந்திய அணி வீரர்கள் அதன் பிறகு மும்பையில் நடைபெற்ற வெற்றி அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கடைசியாக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் டிராபி வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது.

click me!