ஆப்கானிஸ்தானிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆப்கானிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கடந்த 11 ஆம் தேதி மொஹாலியில் நடந்தது. இதில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி தற்போது இந்தூரில் நடக்கிறது.
நான் விளையாடுறது மாதிரியே இருக்கு – ரிங்கு சிங்கின் பேட்டிங்கை புகழ்ந்து பேசிய யுவராஜ் சிங்!
இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். முதல் போட்டியில் இடம் பெறாத விராட் கோலி இந்தப் போட்டியில் இடம் பெற்றுள்ளார். இது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் 150ஆவது டி20 போட்டியாகும். இதன் மூலமாக அதிக டி20 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ள சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு!
முதல் டி20 போட்டியில் ரோகித் சர்மாவை ரன் அவுட் செய்த சுப்மன் கில் இந்தப் போட்டியில் இடம் பெறவில்லை. மேலும், திலக் வர்மாவும் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளார். இடுப்பில் ஏற்பட்ட வலியின் காரணமாக முதல் டி20 போட்டியில் இடம் பெறாத யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்தப் போட்டியில் இடம் பெற்றுள்ளார். மற்றபடி இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. சஞ்சு சாம்சனுக்கு இந்தப் போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஆப்கானிஸ்தான் அணியைப் பொறுத்த வரையில் ரஹ்மத் ஷா நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக நூர் அகமது அணியில் இடம் பெற்றுள்ளார்.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷிவம் துபே, ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.
ஆப்கானிஸ்தான்:
ரஹமானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜத்ரன் (கேப்டன்), அஸ்மாதுல்லா உமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரன், கரீம் ஜனத், குல்புதீன் நைப், நூர் அகமது, ஃபசல்ஹக் ஃபரூக்கி, நவீன் உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான்.