ரிங்கு சிங்கின் பேட்டிங்கை பார்க்கும் போது என்னை பார்ப்பது போன்று இருக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியவர் யுவராஜ் சிங். 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1900 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 3 சதங்கள், 11 அரைசதங்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக 169 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 10 விக்கெட்டுகளும் கைப்பற்றிருக்கிறார். இதே போன்று 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8701 ரன்களும், 14 சதங்களும், 52 அரைசதங்களும் அடித்துள்ளார்.
அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ள சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு!
இதில் அதிகபட்சமாக 150 ரன்கள் அடித்துள்ளார். 111 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். 58 டி20 போட்டிகளில் விளையாடிய யுவராஜ் சிங் 1177 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 77 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 29 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற போது தொடர் நாயகன் விருது வென்றார்.
அவரது ஓய்விற்கு பிறகு இந்திய அணி சிறந்த இடது கை வீரர் இல்லாமல் தவித்து வந்தது. அதன் பிறகு ரிஷப் பண்ட் வந்தார். அவர் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்திய அணியில் இடம் பிடித்தார். அவரைத் தொடர்ந்து இடது கை பேட்ஸ்மேன்களின் வருகையானது இந்திய அணியில் அதிகரித்தது. ரிங்கு சிங், திலக் வர்மா, ஷிவம் துபே என்று இடது கை பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகின்றனர்.
தோனியைப் போன்று சிறந்த பினிஷராக இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வரும் ரிங்கு சிங் இதுவரையில் 13 டி20 போட்டிகளில் விளையாடி 180 ஸ்டிரைக் ரேட்டுடன் 69 சராசரியுடன் 278 ரன்கள் எடுத்துள்ளார். இந்த நிலையில், தான் ரிங்கு சிங்கின் பேட்டிங்கை பார்க்கையில் நான் விளையாடுவது போன்று இருக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், சிறந்த இடது கை பேட்ஸ்மேனாக ரிங்கு சிங் திகழ்ந்து வருகிறார். அவரது பேட்டிங்கை பார்க்கையில் என்னுடைய பேட்டிங்கை பார்ப்பது போன்று இருக்கிறது. ஏனென்றால், எப்போதும் அதிரடியாகவே விளையாட வேண்டும் என்று நினைக்கிறார். இக்கட்டான சூழலிலும் கூட, சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெற்றி பெறச் செய்கிறார். அவர் தான் இந்திய அணியின் சிறந்த பினிஷராக வர முடியும் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Dhruv Jurel: கிரிக்கெட் கிட் வாங்க அம்மா தங்க சங்கிலியை வித்து கொடுத்தாங்க – துருவ் ஜூரெல்!