மகளிர் கிரிக்கெட்: கடைசி ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி..! இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது

By karthikeyan VFirst Published Sep 24, 2022, 11:15 PM IST
Highlights

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி.
 

இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இங்கிலாந்து மகளிர் அணி வென்றது. அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் நடந்தது.

முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று இந்திய மகளிர் அணி ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று லண்டனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையும் படிங்க - IND vs AUS: 3வது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்.! உத்தேச ஆடும் லெவன்

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா மற்றும் பின்வரிசையில் தீப்தி ஷர்மா ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். ஸ்மிரிதி மந்தனா 50 ரன்களுக்கும், தீப்தி ஷர்மா 68 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். மற்ற அனைவருமே சொதப்பியதால் இந்திய அணி வெறும் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையும் படிங்க - ஃபேஸ்புக்கில் ட்விஸ்ட் வைத்த தோனி.. என்ன சொல்லப்போகிறார் தல..? ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

170 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து மகளிர் அணி, இந்திய வீராங்கனைகளின் பவுலிங்கில் சரணடைந்தது. அனைத்து வீராங்கனைகளும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 43.3 ஓவரில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3-0 என இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.
 

click me!