IND vs NZ 2வது டி20: இந்திய அணியில் ஒரு மாற்றம்.. ஐபிஎல்லில் அசத்திய பவுலர் அறிமுகம்..! டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan VFirst Published Nov 19, 2021, 6:45 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.

2வது டி20 ராஞ்சியில் இன்று நடக்கிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், இந்த வெற்றி பெற்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் களமிறங்கியுள்ளன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். முதல் போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா, இந்த போட்டியிலும் டாஸ் வென்றார். இந்திய டி20 அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பெரும்பாலான டாஸை தோற்பார். ஆனால் ரோஹித் சர்மா தொடர்ந்து டாஸை ஜெயித்துவருகிறார். இதே டாஸ் அதிர்ஷ்டம் அவருக்கு தொடர்ந்தால் அது இந்திய அணிக்கு நல்லது. 

இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் இடது கையில் அடிபட்டதன் காரணமாக ஃபாஸ்ட்  பவுலர் முகமது சிராஜ் இன்றைய போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஐபிஎல் 14வது சீசனில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ஹர்ஷல் படேல் இந்திய டி20 அணியில் அறிமுகமாகியுள்ளார்.

கடந்த போட்டியில் வெங்கடேஷ் ஐயர் இந்திய அணியில் அறிமுகமான நிலையில், இந்த போட்டியில் ஹர்ஷல் படேல் அறிமுகமாகியுள்ளார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல்.

நியூசிலாந்து அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ராச்சின் ரவீந்திராவுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்பின்னர் டாட் ஆஸ்டிலுக்கு பதிலாக இஷ் சோதியும், லாக்கி ஃபெர்குசனுக்கு பதிலாக ஆடம் மில்னேவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், மார்க் சாப்மேன், க்ளென் ஃபிலிப்ஸ், டிம் சேஃபெர்ட் (விக்கெட் கீப்பர்), ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி (கேப்டன்), இஷ் சோதி, ஆடம் மில்னே, டிரெண்ட் போல்ட்.
 

click me!