IND vs NZ முதல் டி20: இந்திய அணியில் Venkatesh Iyer அறிமுகம்..! டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan VFirst Published Nov 17, 2021, 6:58 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் இளம் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் (Venkatesh Iyer) அறிமுகமாகியுள்ளார்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடக்கிறது. ராகுல் டிராவிட்டின் பயிற்சியில், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில்(ரோஹித் முழு நேர கேப்டன் ஆன பிறகு) இந்திய அணி ஆடும் முதல் தொடர் என்பதால் இந்த தொடரின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறிய இந்திய அணி, அடுத்த ஆண்டு உலக கோப்பைக்கான தயாரிப்பை இந்த தொடரிலிருந்தே தொடங்குகிறது. அந்தவகையில், இந்த தொடர் மிக முக்கியமானது.

ஜெய்ப்பூரில் இன்று நடக்கும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் இளம் வீரரான வெங்கடேஷ் ஐயர் அறிமுகமாகிறார்.

ஐபிஎல்லில் அபாரமாக பேட்டிங் ஆடி, பவுலிங்கிலும் அசத்தி ஆல்ரவுண்டராக நம்பிக்கையளித்த வெங்கடேஷ் ஐயருக்கு இந்திய அணியில் ஆட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியில் அறிமுகமாகும் வெங்கடேஷ் ஐயருக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கேப் கொடுத்தார்.

வெங்கடேஷ் ஐயர் அணியில் எடுக்கப்பட்டதால், இஷான் கிஷனுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. இஷான் கிஷனை ஆடவைத்தால், இந்திய அணி சரியாக 5 பவுலிங் ஆப்சனுடன் ஆட நேரிடும். ஆனால் வெங்கடேஷ் ஐயர் பந்துவீசுவார் என்பதால் 6வது பவுலிங் ஆப்சனாக திகழ்வார். 

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், முகமது சிராஜ்.

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், மார்க் சாப்மேன், க்ளென் ஃபிலிப்ஸ், டிம் சேஃபெர்ட் (விக்கெட் கீப்பர்), ராச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி (கேப்டன்), டாட் ஆஸ்டில், லாக்கி ஃபெர்குசன், டிரெண்ட் போல்ட்.
 

click me!