IND vs NZ டி20: இந்திய அணி இந்த 11 பேரை இறக்கிவிடுங்க.. பெரிதாக எதிர்பார்க்கப்படும் வீரரை கழட்டிவிட்ட உத்தப்பா

By karthikeyan VFirst Published Nov 17, 2021, 5:20 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணி எந்த 11 வீரர்களுடன் களமிறங்கலாம் என்ற தனது கருத்தை கூறியுள்ளார் ராபின் உத்தப்பா.
 

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இன்று (17), 19, 21 ஆகிய நாட்களில் 3 டி20 போட்டிகளும், அதைத்தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகளும் நடக்கவுள்ளன.

முதல் டி20 போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடக்கிறது. இந்திய டி20 அணியின் முழுநேர கேப்டனாக ரோஹித் சர்மா பொறுப்பேற்ற பின், அவரது தலைமையில் இந்திய அணி ஆடும் முதல் போட்டி இது. தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பயிற்சியில், கேப்டன் ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணியின் முதல் தொடர் இது என்பதால், இந்த தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த தொடர் அவர்களுக்கு மிக முக்கியமானது.

இந்த டி20 தொடரில் விராட் கோலி, பும்ரா, ஷமி, ஜடேஜா, ஹர்திக்  பாண்டியா, ஷர்துல் தாகூர் ஆகிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. எனவே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடக்கவுள்ள நிலையில், இந்த போட்டிக்கான இந்திய அணியின் தனது ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் ராபின் உத்தப்பா.

ரோஹித் சர்மாவுடன் அவரது தொடக்க ஜோடியான கேஎல் ராகுலே தொடக்க வீரராக இறங்கலாம் என்று ராபின் உத்தப்பா தெரிவித்திருக்கிறார். இந்த தொடரில் கோலி ஆடாததால், ராகுல் 3ம் வரிசையில் ஆடலாம். அதனால் இஷான் கிஷனை ரோஹித்துடன் தொடக்க வீரராக இந்திய அணி இறக்கிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இஷான் கிஷன் மீது பெரும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

ஆனால் ரோஹித்துடன் ராகுலே தொடக்க வீரராக இறங்கலாம் என்று தெரிவித்துள்ள உத்தப்பா, 3ம் வரிசையில் ருதுராஜ் கெய்க்வாட்டை தேர்வு செய்துள்ளார். ஐபிஎல் 14வது சீசனில் அதிக ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதை வென்ற ருதுராஜ் கெய்க்வாட்டை 3ம் வரிசையில் தேர்வு செய்துள்ள உத்தப்பா, 4ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர், 5ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இஷான் கிஷனை தனது ஆடும் லெவனில் தேர்வு செய்யவேயில்லை.

ஸ்பின்னர்களாக ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரையும், ஃபாஸ்ட் பவுலர்களாக ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.

ராபின் உத்தப்பா தேர்வு செய்த இந்திய அணியின் ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ். 
 

click me!