ஒருவழியா அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்துட்டாங்கப்பா..! இந்தியா vs நமீபியா மோதல்.. டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan VFirst Published Nov 8, 2021, 7:24 PM IST
Highlights

நமீபியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக இந்த தொடரை தொடங்கிய இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக மோசமாக விளையாடி படுதோல்வி அடைந்ததன் விளைவாக அரையிறுதிக்குக்கூட முன்னேறாமல் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது.

இதையும் படிங்க - நாட்டுக்காக ஆடுறத விட ஐபிஎல் தான் இவங்களுக்கு முக்கியமா போச்சு! பிசிசிஐ உடனே நடவடிக்கை எடுக்கணும் - கபில் தேவ்

ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய சிறிய அணிகளுக்கு எதிராக அபார வெற்றியை இந்திய அணி பெற்றிருந்தாலும், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு ஆகிய பெரிய அணிகளுக்கு எதிராக படுதோல்வி அடைந்தது. அதன்விளைவாக அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறிய இந்திய அணி, சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இன்று நமீபியாவிற்கு எதிராக ஆடுகிறது.

இதையும் படிங்க - நீங்க சொல்றது ஒண்ணும் செய்றது ஒண்ணுமா-வுல இருக்கு..! இந்திய அணி தேர்வை கடுமையாக விளாசிய ஹர்பஜன் சிங்

துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இந்த தொடரில் ஆடிய 3 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட வீழ்த்த மாயாஜால ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு கிடைத்திராத ரிஸ்ட் ஸ்பின்னர் ராகுல் சாஹர் ஆடுகிறார்.

Toss news from Dubai 🪙

India have won the toss and will field first. | | https://t.co/58OdXy36FP pic.twitter.com/LHgoobYU48

— ICC (@ICC)

இதையும் படிங்க - முடிந்தது கோலியின் சோலி.. டி20 கிரிக்கெட்டில் கோலியின் டாப் 5 கேப்டன்சி சொதப்பல்கள்

இந்திய அணி:

கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ராகுல் சாஹர், ஜஸ்ப்ரித் பும்ரா.

இதையும் படிங்க - இதுதான் என்னோட ஆல்டைம் பெஸ்ட் டி20 லெவன்..! கிங் கோலிக்கு இடம் இல்ல.. ஹர்பஜன் சிங் அதிரடி

நமீபியா அணி:

ஸ்டீஃபன் பார்டு, மைக்கேல் வான் லிங்கன், க்ரைக் வில்லியம்ஸ், கெர்ஹார்டு எராஸ்மஸ் (கேப்டன்), ஜேன் க்ரீன் (விக்கெட் கீப்பர்), டேவிட் வீஸ், ஜேன் ஃப்ரைலிங்க், ஜேஜே ஸ்மிட், ஜான் நிகோல் லாஃப்டி ஈட்டான், ருபென் ட்ரம்பெல்மேன், பெர்னார்டு ஸ்கால்ட்ஸ்.

இதையும் படிங்க - சீனியர் பிளேயர்ஸ்லாம் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க!2022 டி20 உலக கோப்பைக்கு இந்த 5 இளம் வீரர்களை ரெடி பண்ணுங்க-சேவாக்
 

click me!