
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என இந்திய அணி ஏற்கனவே வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி இன்று நடக்கிறது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல் 2 போட்டிகளில் ஆடாத தொடக்க வீரர் ஷிகர் தவான் இந்த போட்டியில் ஆடுகிறார். அதனால் கேஎல் ராகுலுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் முதல் 2 போட்டிகளில் ஆடாத ஷ்ரேயாஸ் ஐயர் இந்த போட்டியில் ஆடுவதால், தீபக் ஹூடா நீக்கப்பட்டுள்ளார்.
ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். குல்தீப் யாதவ் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூருக்கு பதிலாக தீபக் சாஹர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.