Yuzvendra Chahal: புஷ்பா பட புஷ்பராஜாக மாறிய சாஹல்..! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோ

Published : Feb 10, 2022, 09:43 PM IST
Yuzvendra Chahal: புஷ்பா பட புஷ்பராஜாக மாறிய சாஹல்..! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோ

சுருக்கம்

புஷ்பா பட பாடல்கள், வசனங்களுக்கு நடித்து அனைத்து தரப்பினரும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுவரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் புஷ்பா பட வசனத்தை பேசி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.  

அல்லு அர்ஜூன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது புஷ்பா திரைப்படம். புஷ்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விளையாட்டு வீரர்கள் மற்றும் மற்ற பிரபலங்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள், ஊ சொல்றியா மாமா, ஸ்ரீவள்ளி, சாமி ஆகிய பாடல்கள் ஆகியவற்றிற்கு, அந்த படத்தில் இடம்பெற்றபடியே நடித்து பலரும் வீடியோக்களை வெளியிட்டுவருகின்றனர்.

ரசிகர்கள் அந்த காட்சிகளை நடித்தோ அல்லது நடனமாடியோ வீடியோ வெளியிடுவது பெரிய விஷயமல்ல. ஆனால் கிரிக்கெட் வீரர்களையும் புஷ்பா படம் விட்டுவைக்கவில்லை. டேவிட் வார்னர் புஷ்பா பாடலுக்கு நடனமாடிய வீடியோ செம வைரலான நிலையில், விராட் கோலி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஒடீன் ஸ்மித்தின் கேட்ச்சை பிடித்துவிட்டு ஸ்ரீவள்ளி பாடல் நடன ஸ்டெப்பை போட்டார்.

இந்நிலையில், இப்போது இந்திய அணியின் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல், புஷ்பா பட வசனத்தை பேசி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ செம வைரலாகிவருகிறது. அந்த வீடியோ லைக்குகளை அள்ளிவருகிறது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!