இந்தியா vs தென்னாப்பிரிக்கா.. காலி ஸ்டேடியத்தில் கடைசி 2 ஒருநாள் போட்டிகள்

By karthikeyan VFirst Published Mar 13, 2020, 10:21 AM IST
Highlights

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி 2 ஒருநாள் போட்டிகள், ஸ்டேடியத்தில் ரசிகர்களே இல்லாமல் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 
 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவில் இதுவரை 74 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவிலும் கொரோனா வேகமாக பரவிவருவதால், மக்கள் மொத்தமாக ஓரிடத்தில் கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கொரோனா பாதிப்பால் ஐபிஎல் நடத்தப்படுவது சந்தேகமாகியுள்ளது. எனினும் ஐபிஎல் நடத்தப்படுவது குறித்த தகவல், நாளை ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டம் முடிந்த பின்னர் தான் தெரியவரும்.

இந்நிலையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே வரும் 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் முறையே லக்னோ மற்றும் கொல்கத்தாவில் நடைபெறவுள்ள ஒருநாள் போட்டிகளை காண ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுவதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளது. நேற்று தர்மசாலாவில் நடந்திருக்க வேண்டிய முதல் போட்டி, மழை காரணமாக முழுவதும் பாதிக்கப்பட்டது. அடுத்த 2 போட்டிகள் 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக அந்த போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை. 

Also Read - பாபர் அசாம் செம பேட்டிங்.. சவாலான இலக்கை விக்கெட் இழப்பின்றி அடித்த கராச்சி அணி அபார வெற்றி

பிசிசிஐ, மத்திய சுகாதாரத்துறை, விளையாட்டுத்துறை ஆகிய அமைச்சகங்களின் அறிவுறுத்தலின் பேரில், ரசிகர்கள் மற்றும் வீரர்களின் நலன்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 
 

click me!