India vs West Indies: இந்திய டி20 அணி அறிவிப்பு.. ஆல்ரவுண்டர்களாக எடுத்து குவித்த தேர்வாளர்கள்

By karthikeyan VFirst Published Jan 27, 2022, 11:28 AM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய இந்திய அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு தொடர்களையும் இழந்தது. டெஸ்ட் தொடரை 2-1 என இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆகி அதிர்ச்சியளித்தது.

அடுத்ததாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. வரும் பிப்ரவரி 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள்  போட்டிகளும், பிப்வரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகளும் நடக்கவுள்ளன.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான  டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான டி20 அணியில் கேஎல் ராகுல் துணை கேப்டன். இவர்களுடன் மற்றொரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக இஷான் கிஷன் எடுக்கப்பட்டுள்ளார். ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ள ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. மிடில் ஆர்டரில் விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயருக்கு ஒருநாள் அணியில் இடம் கிடைக்காத நிலையில், டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். ஆல்ரவுண்டர்களாக தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் ஆகிய இருவரும் எடுக்கப்பட்டுள்ளனர். ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகிய இருவரும் இன்னும் முழு ஃபிட்னெஸை பெறவில்லை. 

ஸ்பின்னர்களாக யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகிய நால்வரும் இடம்பிடித்துள்ளனர். பும்ரா, ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் பவுலர்களாக முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் எடுக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்கள் அதிகம் தேவை என்பதால் இந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் நிறைய ஆல்ரவுண்டர்கள் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக டி20 அணியில், வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், அக்ஸர் படேல் ஆகிய ஆல்ரவுண்டர்கள் எடுக்கப்பட்டுள்ளனர். வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் படேல் ஆகியோரும் நன்றாக பேட்டிங் ஆடுவார்கள்.

இந்திய டி20 அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ரவி பிஷ்னோய், அக்ஸர் படேல், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல்.
 

click me!