பாகிஸ்தானை தொடர்ந்து வங்கதேசத்திலும் கிரிக்கெட் விளையாட விரும்பாத இந்தியா! இதுதான் காரணம்!

Published : Jul 04, 2025, 04:47 PM IST
India vs Bangladesh

சுருக்கம்

ஆகஸ்ட் மாதம் வங்கதேச சுற்றுப்பயணத்தை இந்திய கிரிக்கெட் அணி ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Indian Cricket Team Likely To Cancel Bangladesh Tour: இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாட திட்டமிட்டு இருந்தது. இந்த தொடர் ஆகஸ்ட் 17ம் தேதி அன்று டாக்காவில் தொடங்க இருந்தது. ஆனால் பிசிசிஐ இப்போது இந்த தொடரில் பங்கேற்க விருப்பம் காட்டவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்மை காலமாக இந்தியா, வங்கதேசம் இடையிலான உறவில் ஏற்பட்ட விரிசல் இதற்கு முக்கிய காரணம் என தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவுக்கு எதிராக வங்கதேசம் கருத்து

வங்கதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட மாணவர் புரட்சியால் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டாதால் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இடைக்கால அதிபர் ஆனார். அவர் பதவியேற்றது முதல் இந்தியாவும், வங்கதேசத்துக்கும் இடையே ஏழாம் பொருத்தம் நிலவி வருகிறது. முகமது யூனுஸ் இந்தியாவுக்கு எதிராக கருத்துகளை கூறி வருகிறார்.

பிசிசிஐ அதிரடி முடிவு

மேலும் சீனாவுக்கு சென்று இந்தியாவுக்கு எதிராக பேசியது, துருக்கி ட்ரோன்களை எல்லையில் நிலைநிறுத்தியது மற்றும் பாகிஸ்தானுடன் இராணுவப் பயிற்சி மேற்கொள்வது போன்ற செயல்களை வங்கதேசம் இந்தியாவுக்கு எதிராக செய்து வருகிறது. இத்தைகய சூழ்நிலையில் இந்திய அணி வங்கதேசம் சென்று விளையாடுவது சரியாக இருக்காது பிசிசிஐ கருதுகிறது.

மத்திய அரசு அறிவுறுத்தல்

இது பிசிசிஐ எடுத்த தனிப்பட்ட முடிவு அல்ல. இந்திய அணி வங்கதேசம் செல்ல வேண்டாம் என மத்திய அரசு பிசிசிஐயிடம் அறிவுறுத்தி இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்தியா ஏற்கெனவே பாகிஸ்தானுடன் நேரடியாக விளையாடுவதை தவிர்த்து வருகிறது. இப்போது வங்கதேசத்துக்கு எதிராகவும் களமிறங்கியிருக்கிறது.

பாகிஸ்தானுடன் விளையாடாத இந்தியா

இந்தியாவை பொறுத்தவரை 2029ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் நேரடியாக கிரிக்கெட் விளையாடுவதில்லை. ஆசிய கோப்பை கிரிக்கெட்டை பாகிஸ்தான் நடத்திய நிலையில், இந்தியா அங்கு செல்ல மறுத்தது. அந்த போட்டிகளை இந்தியா இலங்கை சென்று விளையாடியது. இதனைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை பாகிஸ்தான் நடத்தியது. இதனால் இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாமல் புறக்கணித்து தங்களுக்குரிய போட்டிகளை துபாயில் விளையாடி கோப்பையையும் தட்டித்தூக்கியது.

இந்தியா விளையாட விரும்பவில்லை

பாகிஸ்தான் உடனான மோதலை தொடர்ந்து செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி உள்ளார். அவர் இருக்கும் அமைப்பின் கீழ் இந்தியா விளையாட விரும்பவில்லை என்பதால் இந்த முடிவை இந்தியா எடுத்ததாக தகவல் வெளியானது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பெரும் நெருக்கடி

ஆசிய கோப்பை போட்டியின் நிதி ஆதரவில் பெரும் பகுதி இந்திய ஸ்பான்சர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்களிடமிருந்து வருகிறது. சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (SPNI) 2024 இல் ஆசிய கோப்பை நிகழ்வுகளுக்கான ஊடக உரிமைகளை எட்டு ஆண்டுகளில் 170 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது. பிசிசிஐ ஆசிய கோப்பையில் இருந்து விலகினால் இந்தியா ஸ்பான்சர் நிறுவனங்களும், சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா நிறுவனமும் அதில் இருந்து விலகும். இதனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?