Shubman Gill vs Virat Kohli: 'கிங்' இடத்தை பிடிக்கும் 'பிரின்ஸ்'! கோலியை தூக்கி சாப்பிடும் கில்லின் சாதனை!

Published : Jul 03, 2025, 08:15 PM IST
Shubman Gill vs Virat Kohli

சுருக்கம்

விராட் கோலியை ஓவர்டேக் செய்த சுப்மன் கில் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு சாதனைகளை பார்ப்போம்.

IND vs ENG Test: Shubman Gill Overtakes Virat Kohli: இந்தியா, இங்கிலாந்து இடையே 2வது டெஸ்ட் போட்டி நடந்து வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்யும் இந்திய அணி 500 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் (250+ ரன்கள்) அடித்து சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் பல்வேறு சாதனைகளை சுப்மன் கில் முறியடித்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் முதல் இரட்டை சதம் அடித்த இந்திய கேப்டன், சேனா நாடுகளில் (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா) இரட்டை சதம் அடித்த முதல் ஆசிய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சுப்மன் கில் மாபெரும் சாதனை

மேலும் இங்கிலாந்து மண்ணில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர், இளம் கேப்டனாக இரட்டை சதம் அடித்த 2வது சர்வதேச வீரர் என்பது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார். 'இந்திய கிரிக்கெட்டின் பிரின்ஸ்' என அழைக்கப்படும் சுப்மன் கில், 'கிரிக்கெட்டின் கிங்' என அழைக்கப்படும் கோலியின் பல்வேறு சாதனைகளை தகர்த்தெறிந்துள்ளார்.

சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஒப்பீடு

இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு பார்த்தால் சுப்மன் கில் மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் 138 இன்னிங்ஸ்களில் 16 சதங்களை அடித்திருந்தனர். சுப்மன் கில் டெஸ்ட் போட்டிகளில் ஏழு சதங்களை அடித்துள்ளார். அதே நேரத்தில் 8 சதங்கள் ஓடிஐ போட்டிகளில் வந்துள்ளன. டி20 போட்டிகளிலும் ஒரு சதம் அடித்துள்ளார். கோலியை பொறுத்தவரை இந்த கட்டத்தில் அவர் டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்களை மட்டுமே அடித்திருந்தார். மீதமுள்ள 13 சதங்கள் ஓடிஐ போட்டிகளில் இருந்து வந்தன.

138 இன்னிங்ஸ்களில் யார் ஆதிக்கம்?

சுப்மன் கில் அதிகபட்சமாக 138 இன்னிங்ஸ்களில் விளையாடிய பிறகு அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் 45.2 சராசரியுடன் 5,515 ரன்களை குவித்துள்ளார். இதுவரை அவர் 6820 பந்துகளை எதிர்கொண்டு 80.86 ஸ்ட்ரைக் ரேட்டில் இந்த ரன்களை எடுத்திருந்தார். விராட் கோலியை பொறுத்தவரை அவர் இதே கட்டத்தில் அனைத்து வடிவங்களிலும் 138 இன்னிங்ஸ்களில் 45.47 சராசரியுடன் 5,503 ரன்கள் எடுத்திருந்தார். கோலி 7,091 பந்துகளை எதிர்கொண்டு 77.6 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் எடுத்திருந்தார்.

அதிக முறை டக் அவுட் ஆனது யார்?

சுப்மன் கில் 138 இன்னிங்ஸ்களில் 113 சிக்ஸர்கள் விளாசி 615 பவுண்டரிகளுடன் சாதனை படைத்துள்ளார். கோலி இதே 138 இன்னிங்ஸ்களில் 35 சிக்சர்கள் மட்டுமே விளாசி இருந்தார். 556 பவுண்டரிகளை அடித்திருந்தார். சர்வதேச அளவில் 138 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு கில் இதுவரை 7 முறை டக் அவுட்டாகியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 5 முறை டக் அவுட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தலா 1 முறை டக் அவுட்டாகியுள்ளார். கோலியுடன் ஒப்பிட்டால் அவர் 138 இன்னிங்ஸ்களில் 9 முறை டக் அவுட்டாகி இருந்தார். டெஸ்ட் போட்டிகளில் 2 முறை மற்றும் ஒருநாள் போட்டிகளில் 7 முறை டக் அவுட்டாகியிருந்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?