சச்சின் அதிரடி அரைசதம்; டெத் ஓவர்களில் யுவராஜ் சிங் காட்டடி..! 20 ஓவரில் 218 ரன்களை குவித்த இந்தியா லெஜண்ட்ஸ்

By karthikeyan VFirst Published Mar 17, 2021, 8:58 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் அதிரடி அரைசதம் மற்றும் யுவராஜ் சிங்கின் கடைசி நேர காட்டடியால் 218 ரன்களை குவித்த இந்தியா லெஜண்ட்ஸ் அணி, 219 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது.
 

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணி, டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா லெஜண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சேவாக் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 5.3 ஓவரில் 56 ரன்களை சேர்த்து கொடுத்தனர். 

17 பந்தில் 35 ரன் அடித்து சேவாக் ஆட்டமிழக்க, கைஃப் 21 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த சச்சின் டெண்டுல்கர், 42 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 65 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

யுவராஜ் சிங் மற்றும் யூசுஃப் பதான் ஆகிய 2 அதிரடி வீரர்களும், தாங்கள் ஆடிய காலத்தில் ஆடியதை போலவே அடி பிரித்து மேய்ந்தனர். 19வது ஓவரில் யுவராஜ் சிங் 4 சிக்ஸர்களை விளாசினார். கடைசி ஓவரிலும் 2 சிக்ஸர்களை விளாசினார் யுவராஜ் சிங்.

யுவராஜ் சிங் 20 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 49 ரன்களை குவிக்க, அதே 20 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 37 ரன்கள் அடித்தார். இதையடுத்து 20 ஓவரில் 218 ரன்களை குவித்து 219 ரன்கள் என்ற கடின இலக்கை வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா லெஜண்ட்ஸ் அணி.
 

click me!