ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா முதலில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து நடந்த 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அதன் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை 2023 மற்றும் உலகக் கோப்பை 2023 தொடர் என்று அடுத்தடுத்து நடந்தது.
சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக சாம்பியனானது. இந்த நிலையில் தான் மீண்டும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டி தற்போது விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்தியா:
ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ரிங்கு சிங், அக்ஷர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், பிரஷித் கிருஷ்ணா.
ஆஸ்திரேலியா:
மேத்யூ ஷார்ட், ஸ்டீஸ் ஸ்மித், ஜோஷ் இங்கிலிஸ், ஆரோன், ஹார்டி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), சீன் அபாட், நாதன் எல்லிஸ், ஜேசன் பெஹ்ரெண்டார்ஃப், தன்வீர் சங்கா.