#INDvsENG தவான் அதிரடி அரைசதம்.. ஏமாற்றமளித்த ரோஹித்..! திடீரென மளமளவென விழுந்த 3 விக்கெட்டுகள்

Published : Mar 28, 2021, 03:20 PM IST
#INDvsENG தவான் அதிரடி அரைசதம்.. ஏமாற்றமளித்த ரோஹித்..! திடீரென மளமளவென விழுந்த 3 விக்கெட்டுகள்

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ரோஹித்தும் தவானும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்த நிலையில், ரோஹித் அவுட்டானதையடுத்து, தவானும் கோலியும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று புனேவில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

ரோஹித்தும் தவானும் இணைந்து அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். குறிப்பாக தவான் மிகச்சிறப்பாக ஆடி பவுண்டரிகளாக விளாசி அரைசதம் அடித்து, இந்திய அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித்தும் தவானும் இணைந்து 14.4 ஓவரில் 103 ரன்களை குவித்து கொடுத்தனர்.

ரோஹித் 37 ரன்னில் அடில் ரஷீத்தின் சுழலில் ஆட்டமிழக்க, 56 பந்தில் 10 பவுண்டரிகளுடன் 67 ரன் அடித்த தவானும் ரஷீத்தின் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கோலி 7 ரன்னில் மொயின் அலியின் பந்தில் க்ளீன் போல்டாக, 123 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

அதன்பின்னர் கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் இணைந்து ஆடிவருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

IND VS NZ டி20 தொடரில் இருந்து தமிழக வீரர் விலகல்.. மாற்று வீரர் இவரா?
IND vs NZ: சிஎஸ்கே முன்னாள் வீரர் ருத்ரதாண்டவம்.. 2வது ஓடிஐயில் இந்தியாவை பந்தாடிய நியூசிலாந்து!