நாடா, ஐபிஎல்லா..? முடிவெடுத்தே தீரணும்..! பிசிசிஐக்கு ரவி சாஸ்திரி கோரிக்கை

By karthikeyan VFirst Published Mar 23, 2023, 8:13 PM IST
Highlights

கிரிக்கெட் வீரர்களின் பணிச்சுமையை குறைக்க ஐபிஎல்லில் முக்கியமான வீரர்கள் ஆடுவது குறித்து ஐபிஎல் அணிகளுடன் பேசி பிசிசிஐ தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என்று முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 16வது சீசன் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் முடிந்து 10 நாளில் ஜூன் 7ம் தேதி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தொடங்குகிறது. ஜூன் 7 தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணி தோற்று கோப்பையை இழந்ததால் இந்த ஃபைனலில் ஜெயிப்பது முக்கியம்.

அதைத்தொடர்ந்து ஒருநாள் உலக கோப்பை நடக்கவுள்ளது. இந்த ஆண்டு முக்கியமான ஐசிசி கோப்பை போட்டிகள் இருப்பதால் அந்த தொடர்களில் அணியின் முக்கியமான பெரிய வீரர்கள் அனைவரும் ஆடவேண்டியது அவசியம். வீரர்கள் தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடுவதால் பணிச்சுமை அதிகரிப்பால் அவர்களது ஃபிட்னெஸ் பாதிக்கப்படுகிறது.

நீங்க சீனியர்.. எனக்கு கீழ் பணிபுரிவது நல்லா இருக்காது! சீனியர் ஸ்பின்னரின் சேவையை ஏற்க மறுத்த ராகுல் டிராவிட்

டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 ஃபார்மட்டுகளில் ஆடுவதுடன், ஐபிஎல்லிலும் இரண்டரை மாதங்கள் வீரர்கள் ஆடுவதால் போதுமான ஓய்வு கிடைப்பதில்லை. அதன்விளைவாகத்தான், ஜஸ்ப்ரித் பும்ரா, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா ஆகிய வீரர்கள் அடிக்கடி காயமடைகின்றனர். 

பும்ரா மற்றும் ஜடேஜா கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் ஆடாதது இந்திய அணிக்கு  பெரும் பின்னடைவாக அமைந்தது. பும்ரா இன்னும் குணமடையவில்லை. ஜடேஜா அறுவை சிகிச்சை முடிந்து இந்தியாவிற்காக ஆடிவருகிறார். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர் முதுகில் காயம் காரணமாக ஆஸி.,க்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடாமல் விலகிவிட்டார். ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளில் முக்கியமான வீரராக திகழ்கிறார்.

IND vs AUS: இந்திய அணியின் தோல்விக்கு இவங்கதான் காரணம்..! கேப்டன் ரோஹித் சர்மா பகிரங்க குற்றச்சாட்டு

அடுத்ததாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் ஒருநாள் உலக கோப்பை நடக்கவுள்ளதால் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஷுப்மன் கில், ஷமி, ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகிய முக்கியமான வீரர்களின் ஃபிட்னெஸ் மிக முக்கியம். இவர்கள் இரண்டரை மாதம் ஐபிஎல்லில் ஆடிவிட்டு 10 நாள் இடைவெளியில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடவேண்டும். 

இந்நிலையில், இதுகுறித்து பிசிசிஐ திடமான முடிவெடுக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ரவி சாஸ்திரி, நிறைய பேர் காயமடைவதை நினைத்து பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. நாங்கள் ஆடிய காலத்தில் இவ்வளவு வசதிகள் இல்லை. ஆனால் நாங்கள் இப்போது ஆடுவதை போல ஓய்வே இல்லாமல் ஆடியதில்லை. ஆண்டில் 8 மாதங்கள் கிரிக்கெட் ஆடுவோம். அதனால் அந்தக்கால வீரர்கள் தாராளமாக 8-10 ஆண்டுகள் ஆடினோம். ஆனால் இப்போது உலகம் முழுதும் பல லீக் போட்டிகள் நடத்தப்படுவதால் கிரிக்கெட் வீரர்கள் ஓய்வே இல்லாமல் கிரிக்கெட் ஆடிவருகின்றனர். 

குடும்பம் குட்டினு ஓடாம ஒழுங்கா எல்லா மேட்ச்சிலும் ஆடுப்பா நீ..! ரோஹித் சர்மா மீது கவாஸ்கர் காட்டம்

இந்திய வீரர்கள் நாட்டுக்காக ஆடுவது முக்கியம். எனவே அவர்களுக்கு தேவையான ஓய்வு கொடுக்கப்பட வேண்டும். ஐபிஎல்லாக இருந்தாலும் பரவாயில்லை. பிசிசிஐ வீரர்கள் மற்றும் ஐபிஎல் அணிகளுடன் அமர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும். இந்திய வீரர்கள் நாட்டுக்காக ஆடுவது முக்கியம் என்பதை எடுத்துரைத்து தேசத்தின் நலக்காக நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
 

click me!