மனைவியை பிரியும் யுஸ்வேந்திர சாஹல்..? இன்ஸ்டாகிராம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சாஹல்

Published : Aug 18, 2022, 07:52 PM IST
மனைவியை பிரியும் யுஸ்வேந்திர சாஹல்..? இன்ஸ்டாகிராம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சாஹல்

சுருக்கம்

யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி இடையே பிரச்னை; அதனால் இருவரும் பிரிகிறார்கள் என்ற கருத்து பரவிவரும் நிலையில், அதுகுறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.  

இந்திய அணியின் சீனியர் ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல். இந்தியாவிற்காக 67 ஒருநாள் மற்றும் 62 டி20 போட்டிகளில் ஆடியுள்ள யுஸ்வேந்திர சாஹல் முறையே 118 மற்றும் 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

யுஸ்வேந்திர சாஹல் நடன கலைஞரும், யூடியூப் பிரபலமுமான தனஸ்ரீ வெர்மா என்ற பெண்ணை காதலித்து கடந்த 2020 டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார்.

இதையும் படிங்க - இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்காக பக்கா பிளானுடன் சிறப்பாக செயல்படும் ரோஹித் - டிராவிட் கூட்டணி

தனஸ்ரீ வெர்மா, சாஹல் ஆடும் போட்டிகளை காண தவறாது சென்றுவிடுவார். இந்தியாவிற்காகவோ அல்லது ஐபிஎல்லிலோ, எந்த போட்டியில் ஆடினாலும் நேரில் சென்று சாஹலை உற்சாகப்படுத்துவார்.

ஐபிஎல் 2022-ல் கூட சாஹலுடன் பயோ பபுளில் இருந்து அவர் ஆடிய அனைத்து போட்டிகளையும் நேரில் பார்த்தார். அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் கூட இந்திய அணிக்காக ஆடிய சாஹலுடன் சென்றிருந்தார் தனஸ்ரீ வெர்மா.

சாஹல் - தனஸ்ரீ வெர்மா தம்பதியின் வாழ்க்கை சுமூகமாக சென்று கொண்டிருந்த நிலையில், தனஸ்ரீ வெர்மா திடீரென இன்ஸ்டாகிராமில் தனது பெயருக்கு பின்னால் இருந்த சாஹலின் பெயரை நீக்கினார்.

இதையும் படிங்க - கில், தவான் அபார பேட்டிங்.. விக்கெட்டே இழக்காமல் முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேவை ஊதித்தள்ளிய இந்தியா

யுஸ்வேந்திர சாஹலும், புதிய வாழ்வில் அடியெடுத்து வைப்பதாக தெரிவித்திருந்தார். இதைக்கண்ட ரசிகர்களும், நெட்டிசன்களும் சாஹல் - தனஸ்ரீ வெர்மா தம்பதி பிரியவுள்ளதாகவும், விவாகரத்துக்கு நீதிமன்றத்தை ரகசியமாக நாடியுள்ளதாகவும் கருத்துகூறிவந்தனர்.

இதையடுத்து சாஹல் - தனஸ்ரீ வெர்மா தம்பதி ஹாட் டாபிக்காக பேசப்பட்டுவந்த நிலையில், இதுகுறித்து சாஹல் தெளிவுபடுத்தியுள்ளார். “எங்கள் உறவு குறித்த எந்தவிதமான வதந்தியையும் பரப்பவேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள் என்று சாஹல் பதிவிட்டுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

MS Dhoni Records: சென்னையின் ஆல்டைம் ஃபேவரைட்.. யாராலும் முறியடிக்க முடியாத தோனியின் IPL சாதனைகள்!
vaibhav suryavanshi: வெறும் வயிற்றில் சிக்ஸர் மழை! வைபவ் சூர்யவன்ஷியின் 'நோ ஃபுட்' சீக்ரெட்!