INDW vs WIW: வெஸ்ட் இண்டீஸை தூசி போல ஊதித்தள்ளி இந்திய மகளிர் அணி அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jan 30, 2023, 9:30 PM IST
Highlights

முத்தரப்பு டி20 தொடரில் ஃபைனலுக்கு முந்தைய கடைசி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் இடையே முத்தரப்பு டி20 தொடர் நடந்துவருகிறது. இந்த தொடரின் ஃபைனலுக்கு இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் தகுதிபெற்றன. ஏற்கனவே இந்த தொடரை விட்டு வெளியேறிவிட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபைனலுக்கு முந்தைய கடைசி போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ஸ்பின் பவுலிங்கை ஒழுங்கா ஆடவே தெரியல.. இவன் எப்படி இரட்டை சதம் அடித்தான்..?

இந்திய மகளிர் அணி:

ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), தேவிகா வைத்யா, தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், ஷிகா பாண்டே, ராஜேஷ்வரி கெய்க்வாட், ரேணுகா தாகூர் சிங். 

முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து வெளியேறினர். வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதாக ரன் அடிக்கவிடாமல் கடுமையாக கட்டுப்படுத்தினர் இந்திய பவுலர்கள். அந்த அணியின் தொடக்க வீராங்கனை ஹைலி மேத்யூஸ் அதிகபட்சமாக 34 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் ஜைண்டா ஜேம்ஸ் 21 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் வெறும் 94 ரன்கள் மட்டுமே அடித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய தீப்தி ஷர்மா 4 ஓவரில் 11 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து  அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார். பூஜா வஸ்ட்ராகர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தணும்னா அந்த 2 வீரர்களை இந்திய அணி சமாளிக்கணும்..! இயன் சேப்பல் கருத்து

95 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை விரட்டிய இந்திய மகளிர் அணி 14வது ஓவரில் அந்த இலக்கை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிப்ரவரி 2ம் தேதி வியாழக்கிழமை இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே இறுதிப்போட்டி நடக்கிறது.
 

 

click me!