ஸ்பின் பவுலிங்கை ஒழுங்கா ஆடவே தெரியல.. இவன் எப்படி இரட்டை சதம் அடித்தான்..?

By karthikeyan VFirst Published Jan 30, 2023, 7:06 PM IST
Highlights

ஸ்பின் பவுலிங்கை திறம்பட எதிர்கொள்ள முடியாமல் திணறும் இஷான் கிஷனை விமர்சித்துள்ளார் கௌதம் கம்பீர்.
 

இந்திய பேட்ஸ்மேன்கள் பொதுவாக ஸ்பின் பவுலிங்கை திறம்பட ஆடுவார்கள். துணைக்கண்ட ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமானவை என்பதாலும், துணைக்கண்ட நாடுகளில்  தரமான ஸ்பின்னர்கள் எல்லா காலத்திலும் இருந்திருப்பதாலும், ஸ்பின்னை எதிர்கொள்வது இந்திய பேட்ஸ்மேன்களுகு கைவந்த கலை.

ஆனால் சமீபகாலமாக சமகால இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னை எதிர்கொள்ள திணறுகின்றனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வீரர்களை போல ஸ்பின்னை எதிர்கொள்ள திணறுகின்றனர். இப்போது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வீரர்கள் எல்லாம் ஐபிஎல் உட்பட பல டி20 லீக் தொடர்களில் ஆடுவதால் ஸ்பின் பவுலிங்கை எதிர்கொள்ள கற்றுக்கொண்டுவிட்டனர்.

டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தணும்னா அந்த 2 வீரர்களை இந்திய அணி சமாளிக்கணும்..! இயன் சேப்பல் கருத்து

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டி லக்னோவில் நடந்தது. இந்த போட்டியில் மொத்தம் 40 ஓவர்களில் 30 ஓவர்களை ஸ்பின்னர்கள் தான் வீசினர். அந்த ஆடுகளம் முழுக்க முழுக்க ஸ்பின்னிற்கு சாதகமாக இருந்தது. இரு அணி பேட்ஸ்மேன்களுமே பெரிய ஷாட் ஆட முடியாமல் திணறினர். இந்த போட்டியில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கப்படவில்லை. நியூசிலாந்து அணி 6 பவுண்டரிகளும், இந்திய அணி 8 பவுண்டரிகளும் மொத்தமாகவே 14 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டன.

நியூசிலாந்து அணி வெறும் 99 ரன்கள் மட்டுமே அடிக்க, 100 ரன்கள் என்ற எளிய இலக்கை கடைசி ஓவரின் 5வது பந்தில் தான் அடித்து இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஆடவில்லை. இந்திய அணியில் இடம்பெற வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் அண்மையில் இரட்டை சதமடித்த இரட்டை சத மன்னர்கள் இஷான் கிஷன் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் தான் தொடக்க வீரர்களாக இறங்கினர். இருவருமே சோபிக்கவில்லை. கில் 11 ரன்னிலும், இஷான் கிஷன் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

பெரிய ஷாட்டுகளை அடித்து ஆட சவாலான கண்டிஷன் மற்றும் ஆடுகளங்களில் சிங்கிள் ரொடேட் செய்து, வாய்ப்பு கிடைக்கும்போது பவுண்டரி அடித்து ஆடவேண்டும். விராட் கோலி  பவுண்டரிக்கு மட்டும் முயற்சிக்காமல், பந்தை வீணடிக்காமல் சிங்கிள் ரொடேட் செய்து ஆடுவதால் தான் அவரால் அதிகமான சதங்களை விளாசி வெற்றிகரமான சிறந்த வீரராக திகழமுடிகிறது. அதை செய்ய இந்தக்கால இளம் வீரர்கள் தவறுகின்றனர்.

அதை சுட்டிக்காட்டித்தான் இஷான் கிஷனை விமர்சித்துள்ளார் கௌதம் கம்பீர். இதுகுறித்து பேசிய கௌதம் கம்பீர், இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின் பவுலிங்கை எதிர்கொள்ள திணறுகிறார்கள். சிக்ஸர்களை விளாசுவது எளிது. ஆனால் பந்தை வீணடிக்காமல் தொடர்ச்சியாக சிங்கிள் ரொடேட் செய்து ஆடும் திறமை வேண்டும்.  இஷான் கிஷனுக்கு எதிராக மைக்கேல் பிரேஸ்வெல்லை கொண்டுவரும்போதே ஆடுகளம் பற்றி தெரிந்தது. 

ஷாஹீன் அஃப்ரிடிக்கு அருகில் கூட பும்ரா வரமுடியாது! வழக்கம்போலவே இந்தியா மீதான வன்மத்தை உமிழ்ந்த அப்துல் ரசாக்

இந்த இளம் வீரர்கள் சிங்கிள் ரொடேட் செய்து ஆட கற்றுக்கொள்ள வேண்டும். இதுமாதிரியான ஆடுகளங்களில் இறங்கி வந்து சிக்ஸர் அடிப்பதெல்லாம் கடினம். எனவே அதற்கேற்ப ஆடவேண்டும். இஷான் கிஷன் ஆடிய விதம் வியப்பாக இருக்கிறது. வங்கதேசத்தில் இரட்டை சதமடித்த ஒரு வீரரை போல அவர் ஆடவில்லை. அந்த இரட்டை சதத்திற்கு பின் அவரது கெரியர் கிராஃப் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர் அவர் சொதப்பிவருகிறார் என்று கம்பீர் தெரிவித்தார்.
 

click me!