
இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. இரண்டு அணிகளும் 20 ஓவரில் தலா 202 ரன்கள் எடுத்த நிலையில், ஓப்பர் ஓவரில் இந்தியா வெற்றியை ருசித்துள்ளது. இந்தியாவுக்கு மரண பயம் காட்டிய பதும் நிசங்கா 58 பந்தில் 107 ரன்கள் அடித்து அசத்தினார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது.
அபிஷேக் ஷர்மா 31 பந்துகளில் 61 ரன் விளாசினார். திலக் வர்மா 34 பந்துகளில் 49 ரன அடித்தார். பின்பு பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு தொடக்கத்தில் ஒரு விக்கெட் இழந்தது. குசல் மெண்டிஸ் (0) பாண்ட்யா பந்தில் கேட்ச் ஆனார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த பதும் நிசங்காவும், குசல் பெரேராவும் காட்டடி அடித்தனர். இந்தியா பாஸ்ட் பவுலிங்கையும், ஸ்பின் பவுலிங்கையும் சகட்டு மேனிக்கு சிக்சரும், பவுண்டரிகளுமாக விளாசித் தள்ளினார்கள்.
இலங்கை அணி 10 ஓவரில் 114 ரன் எடுத்தது. இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்கள். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் சூர்யகுமார் யாதவ் விழி பிதுங்கினார். இலங்கை ஸ்கோர் 12 ஓவரில் 134 ஆக உயர்ந்தபோது 32 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 58 ரன் விளாசிய குசல் பெரேரோ வருண் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். அடுத்து வந்த சரித் அசலங்கா (5), கமிந்து மெண்டிஸ் (3) ஆகியோர் வந்த வேகத்தில் திரும்பினர்.
பதும் நிசங்கா சாதனை சதம்
ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் தனி ஆளாக போராடிய பதும் நிசங்கா அசத்தல் சதம் அடித்தார். கடைசி ஓவரில் இலங்கை வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்ஷித் ராணா வீசிய முதல் பந்தில் நிசங்கா ஆட்டமிழந்தார். இது தான் ஆட்டத்தின் திருப்பு முனையாகும். மேஜிக் இன்னிங்ஸ் ஆடிய பதும் நிசங்கா 58 பந்தில் 7 பவுண்டரி, 6 சிக்சருடன் 107 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார்.
போட்டி டிரா
அடுத்ததாக கடைசி ஓவரின் 2வது ப்ந்தில் ஜனித் லியனகே ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தில் ஒரு ரன். கடைசி மூன்று பந்துகளில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. நான்காவது பந்தில் இரண்டு ரன்கள். ஐந்தாவது பந்தில் ஷனகா பவுண்டரி அடித்தார். கடைசி பந்தில் வெற்றிக்கு மூன்று ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இலங்கை 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுக்க போட்டி சமநிலையில் முடிந்தது.
சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி
இதனால் வெற்றியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் நடந்தது. ஐந்து பந்துகளுக்குள் இலங்கையின் குசல் பெரேரா (0), தசுன் ஷனகா (0) ஆகியோர் ஆட்டமிழந்தனர். ஒரு ரன் எக்ஸ்ட்ரா மற்றும் மற்றொரு ரன்னை கமிந்து மெண்டிஸ் ஓடி எடுத்தார். இந்தியாவுக்கு வெற்றிக்கு மூன்று ரன்கள் தேவைப்பட்டது. பின்பு பேட்டிங் செய்த இந்தியா, முதல் பந்திலேயே வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் மூன்று ரன்களையும் ஓடி எடுத்ததால் இந்தியா சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
தனி ஆளாக போராடி சூப்பர் சதம் விளாசிய பதும் நிசங்கா ஆட்டநாயகன் விருது வென்றார். நடப்பு ஆசிய கோப்பையில் சதம் அடித்த ஒரே வீரர் இவர் தான். ங்கா ஆட்டநாயகன் விருது வென்றார். நடப்பு ஆசிய கோப்பையில் சதம் அடித்த ஒரே வீரர் இவர் தான். கடைசியில் அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா நன்றாக பவுலிங் செய்து இந்தியாவுக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளனர்.