IND vs SA: ஆவேஷ் கானின் ஆவேச பவுலிங்கில் சரணடைந்த தென்னாப்பிரிக்கா..! 4வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி

Published : Jun 17, 2022, 10:46 PM IST
IND vs SA: ஆவேஷ் கானின் ஆவேச பவுலிங்கில் சரணடைந்த தென்னாப்பிரிக்கா..! 4வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்துள்ளது.  

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியும், 3வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்க அணி 2-1 என டி20 தொடரில் முன்னிலை வகித்த நிலையில், 4வது டி20 போட்டி இன்று ராஜ்கோட்டில் நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தென்னாப்பிரிக்க அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன.

இந்திய அணி:

இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான்.

தென்னாப்பிரிக்க அணி:

டெம்பா பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக், ட்வைன் பிரிட்டோரியஸ், வாண்டர் டசன், ஹென்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், மார்கோ யான்சென், கேஷவ் மஹராஜ், அன்ரிக் நோர்க்யா, லுங்கி இங்கிடி, டப்ரைஸ் ஷாம்ஸி.
 
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்வெறும் 5 ரன்னிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 7 ரன்னிலும் ஆட்டமிழக்க, இந்த தொடரில் நல்ல ஃபார்மில் அருமையாக ஆடிவரும் இஷான் கிஷனும் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மந்தமாக பேட்டிங் ஆடிய ரிஷப் பண்ட் 23 பந்தில் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

 13வது ஓவரின் 5வது பந்தில் ரிஷப் பண்ட் ஆட்டமிழக்க, 13 ஓவரில் 81 ரன்களுக்கு இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின்னர் இந்திய அணியின் சிறந்த ஃபினிஷர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்தனர். 15 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 96 ரன்களை அடித்திருந்தது. 

கடைசி 4 ஓவர்களில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான பேட்டிங்கால் இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது. அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக் 26 பந்தில் அரைசதம் அடித்து கடைசி ஓவரின் 2வது பந்தில் ஆட்டமிழந்தார். இதுதான் டி20 கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக்கின் முதல் அரைசதம் ஆகும். ஹர்திக் பாண்டியா 31 பந்தில் 46 ரன்கள் அடித்தார். இவர்களது அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 169 ரன்கள் அடித்தது இந்திய அணி.

170 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான டெம்பா பவுமா 8 ரன்னில் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். டி காக் 14 ரன்களுக்கு ரன் அவுட்டானார். பிரிட்டோரியஸ்(0), வாண்டர் டசன் (20) ஆகிய இருவரையும் வீழ்த்திய ஆவேஷ் கான், கேஷவ் மஹராஜ் (0), மார்கோ யான்சென்(12) ஆகியோரையும் வீழ்த்தினார். கிளாசன் மற்றும் மில்லர் ஆகிய முக்கிய வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 16.5 ஓவரில் வெறும் 87ரன்களுக்கு ஆல் அவுட்டானது தென்னாப்பிரிக்க அணி.

இதையடுத்து 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 2-2 என டி20 தொடரை சமன் செய்துள்ளது. அபாரமாக பந்துவீசிய ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!