அதிர வைத்த Eng ஓபனிங்: திருப்பத்தை ஏற்படுத்திய ஹர்ஷித் ராணா, பிஷ்னாய் : இந்தியா த்ரில் வெற்றி!

Published : Feb 01, 2025, 12:45 AM IST
அதிர வைத்த Eng ஓபனிங்: திருப்பத்தை ஏற்படுத்திய ஹர்ஷித் ராணா, பிஷ்னாய் : இந்தியா த்ரில் வெற்றி!

சுருக்கம்

India vs England T20 Cricket : புனேவில் நடந்த 4ஆவது T20 போட்டியில் இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

India vs England T20 Cricket : இந்தியா இங்கிலாந்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது: புனேவில் நடந்த 4ஆவது T20 போட்டியில் இந்தியா இங்கிலாந்தை ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அசத்தலான ரன்களை குவித்தது. பின்னர் பந்து வீச்சிலும் அசத்தியது. 182 ரன்கள் இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கில் ஹர்திக் பாண்டியா 53 ரன்களும், சிவம் துபே 52 ரன்களும் எடுத்தனர். துபே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

பெரிய ரன்கள் எடுக்கத் தவறிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்

182 ரன்கள் இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணியில் ஹாரி புரூக் 51 ரன்கள் எடுத்தார். பென் டக்கெட் 39, பில் சால்ட் 21, ஜே ஓவர்டன் 19, ஆதில் ரஷித் 10, லியாம் லிவிங்ஸ்டன் 9, ஜேக்கப் பெத்தல் 6 மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் 2 ரன்கள் எடுத்தனர்.

மாற்று வீரராக வந்த ஹர்ஷித் ராணா அசத்தல்

புனேவில் இந்திய அணியின் வெற்றியில் பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர். ஷிவம் துபே காயம் காரணமாக வெளியேற அவருக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா (Concussion Substitute) மாற்று வீரராக களமிறங்கி அசத்தினார். 4 ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது முதல் ஓவரின் 3ஆவது பந்திலேயே லிவிங்ஸ்டன் விக்கெட்டை எடுத்தார். அதன் பிறகு ஜாகோப் பெத்தெல், ஜெமி ஓவர்டென் ஆகியோரது விக்கெட்டை கைப்பற்றினார். ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் மற்றும் ஹர்திக் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 2ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.

ஹர்திக் மற்றும் ஷிவம் துபே கூட்டணி அசத்தல்

10.4 ஓவர்களில் 79 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே கூட்டணி மீட்சி கொடுத்தது. இருவரும் இணைந்து 45 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்தனர். ஹர்திக் 30 பந்துகளில் 53 ரன்களும், ஷிவம் துபே 31 பந்துகளில் 52 ரன்களும் எடுத்தனர்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?