IND vs NZ இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்..! நல்ல தொடக்கத்திற்கு பின் மளமளவென விக்கெட்டுகளை இழந்த இந்தியா

Published : Dec 03, 2021, 02:27 PM IST
IND vs NZ இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்..! நல்ல தொடக்கத்திற்கு பின் மளமளவென விக்கெட்டுகளை இழந்த இந்தியா

சுருக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் மயன்க் அகர்வாலும் ஷுப்மன் கில்லும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.  

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி இன்று மும்பை வான்கடேவில் தொடங்கியது.  காலை 9.30 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி மைதானம் ஈரமாக இருந்த காரணத்தால் 12 மணிக்கு தொடங்கியது. முதல் செசன் முழுவதும் ஆடவில்லை.

11.30  மணிக்கு டாஸ் போடப்பட்டு 12 மணிக்கு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. கடந்த போட்டியில் ஆடாத விராட் கோலி, இந்த போட்டியில் ஆடுவதால் அஜிங்க்யா ரஹானே அணியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும், ஸ்பின்னர் ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக ஜெயந்த் யாதவும், சீனியர் ஃபாஸ்ட் பவுலர் இஷாந்த் சர்மாவிற்கு இளம் ஃபாஸ்ட் பவுலர் முகமது சிராஜும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இந்திய அணி:

மயன்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், ஜெயந்த் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

நியூசிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்சன் காயம் காரணமாக ஆடவில்லை. அவருக்கு பதிலாக டேரைல் மிட்செல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வில்லியம்சன் ஆடாததால், டாம் லேதம் கேப்டன்சி செய்கிறார்.

நியூசிலாந்து அணி:

டாம் லேதம் (கேப்டன்), வில் யங், டேரைல் மிட்செல், ரோஸ் டெய்லர், ஹென்ரி நிகோல்ஸ், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), ராச்சின் ரவீந்திரா, கைல் ஜாமிசன், டிம் சௌதி, வில் சோமர்வில், அஜாஸ் படேல்.

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயன்க் அகர்வாலும் ஷுப்மன் கில்லும் இணைந்து சிறந்த தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். மயன்க் அகர்வால் அணியில் தனது இடத்தை தக்கவைக்க சிறப்பாக ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய நிலையில், அதை நன்கு உணர்ந்திருந்த மயன்க் அகர்வால் சிறப்பாக ஆடினார்.

அவருடன் இணைந்து ஷுப்மன் கில்லும் நன்றாக ஆடினார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 80 ரன்களை சேர்த்தனர். ஷுப்மன் கில் 44 ரன்னில் அஜாஸ் படேலின் பந்தில் ஆட்டமிழந்தார். இன்னிங்ஸின் 28வது ஓவரில் ஷுப்மன் கில்லை வீழ்த்திய அஜாஸ் படேல், தனது அடுத்த ஓவரான இன்னிங்ஸின் 30வது ஓவரில் புஜாரா மற்றும் கோலி ஆகிய 2 பெரிய வீரர்களையும் வீழ்த்தினார்.

30வது ஓவரின் 2வது பந்தில் புஜாரா ரன்னே அடிக்காமல் போல்டாகி வெளியேற, அதே ஓவரின் கடைசி பந்தில் கோலியும் டக் அவுட்டானார். இதையடுத்து 80 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. மயன்க் அகர்வாலுடன் ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA 2nd T20: சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை டிக்கெட் வெறும் 100 ரூபாய் தான்! எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!