டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியை வீழ்த்தி இந்தியா ஏ அபார வெற்றி

Published : Jul 28, 2019, 04:28 PM IST
டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியை வீழ்த்தி இந்தியா ஏ அபார வெற்றி

சுருக்கம்

5 ஒருநாள் போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற தொடரை இந்தியா ஏ அணி 4-1 என வென்றது. இதையடுத்து அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது.   

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடவுள்ள நிலையில், இந்தியா ஏ அணி வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் ஆடிவருகிறது.

5 ஒருநாள் போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற தொடரை இந்தியா ஏ அணி 4-1 என வென்றது. இதையடுத்து அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. 

முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி 228 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்தியா ஏ அணி ரிதிமான் சஹா மற்றும் ஷிவம் துபே ஆகியோரின் பொறுப்பான அரைசதம் மற்றும் ஷுப்மன் கில், ப்ரியங்க் பன்சால் ஆகியோரின் பங்களிப்பால் இந்தியா ஏ அணி 312 ரன்கள் குவித்தது.

84 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி, 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நதீம், இரண்டாவது இன்னிங்ஸிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 96 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா ஏ அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 30 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

PREV
click me!

Recommended Stories

டிரஸ்ஸிங் ரூமில் செய்யும் வேலையா இது! ஐபிஎல் மானத்தை வாங்கிய ரியான் பராக்.. பிசிசிஐ வைத்த செக்!
IPL ரசிகர்களுக்கு ஜியோவின் மெகா கிப்ட்.. JioHotstar சந்தாவுடன் அன்லிமிடெட் 5G டேட்டா.. முழு விவரம்!