IND vs SL: வரலாறு படைத்த ஜடேஜா! WTC கிரிக்கெட்டில் 'நம்பர் 1' நாயகன்! மெகா சாதனை!

Published : Aug 24, 2026, 02:35 PM IST
Ravindra Jadeja

சுருக்கம்

IND vs SL: இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 50 போட்டிகளில் விளையாடிய முதல் ஆசிய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். விராட் கோலி போன்ற வீரர்களை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, தற்போது இலங்கைக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். கொழும்புவில் நடக்கும் இந்த டெஸ்ட் போட்டியில், ஜடேஜா களமிறங்கியதுமே ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இந்த இரண்டாவது போட்டி, ஜடேஜாவின் கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத போட்டியாக அமைந்துள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் (WTC) அவர் விளையாடும் 50-வது டெஸ்ட் போட்டியாகும்.

இதையும் படிங்க: தோனியின் சாதனையை தூள் தூளாக்கிய 'சிஷ்யன்' ரிஷப் பண்ட்! காயத்துடன் விளையாடி மாஸ் ரெக்கார்ட்!

புதிய மைல்கல்லை எட்டிய ஜடேஜா

இந்திய அணியின் மிகவும் நம்பிக்கைக்குரிய பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக வலம்வரும் ரவீந்திர ஜடேஜா, தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய மற்றும் ஆசிய வீரர் என்ற அரிய சாதனையைப் படைத்துள்ளார். 2012-ல் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான ரவீந்திர ஜடேஜா, WTC தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

2019 முதல் 2021 வரையிலான முதல் WTC சீசனில் ஜடேஜா 11 டெஸ்ட் போட்டிகளிலும், 2021-23 சீசனில் 13 டெஸ்ட் போட்டிகளிலும், 2023-25 நடப்பு சீசனில் 25 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். WTC-யில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் ஜடேஜா நம்பர் 1, கோலிக்கு 3-வது இடம்.

சிராஜ், விராட் கோலியும் லிஸ்ட்டில்...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் ரவீந்திர ஜடேஜா 50* போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் உட்பட 2632 ரன்களும், பந்துவீச்சில் 160 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, 47 போட்டிகளில் விளையாடியுள்ள முகமது சிராஜ் இரண்டாவது இடத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட விராட் கோலி, 46 போட்டிகளில் விளையாடி மூன்றாவது இடத்தில் இருக்கிறார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான ரிஷப் பந்த் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தலா 42 டெஸ்ட் போட்டிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இதையும் படிங்க: Jaiswal vs Fernando: இலங்கை வீரருடன் மோதல்! ஜெய்ஸ்வால் 5 போட்டிகளில் விளையாட தடையா? ஐசிசி ரூல்ஸ் என்ன?

கொழும்பு டெஸ்டில் இந்தியாவின் ஆதிக்கம்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில், முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தேவ்தத் படிக்கல் அடித்த தொடர்ச்சியான இரண்டாவது சதம் (117), கேப்டன் சுப்மன் கில் (50), ரிஷப் பண்ட் (63) ஆகியோரின் உதவியுடன் இந்திய அணி இப்போது வரை 8 விக்கெட் இழப்புக்கு 475 ரன்கள் எடுத்துள்ளது. துருவ் ஜுரல் 95 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தோனியின் சாதனையை தூள் தூளாக்கிய 'சிஷ்யன்' ரிஷப் பண்ட்! காயத்துடன் விளையாடி மாஸ் ரெக்கார்ட்!
Jaiswal vs Fernando: இலங்கை வீரருடன் மோதல்! ஜெய்ஸ்வால் 5 போட்டிகளில் விளையாட தடையா? ஐசிசி ரூல்ஸ் என்ன?