IND vs SL: அடுத்தடுத்த சதம்.. புஜாராவின் 8 ஆண்டு கால சாதனையை தூளாக்கிய படிக்கல்!

Published : Aug 23, 2026, 08:01 PM IST
Devdutt Padikkal

சுருக்கம்

IND vs SL: இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் சதம் விளாசிய இந்திய அணி இளம் வீரர் தேவ்தத் படிக்கல் முன்னாள் வீரர் புஜாராவின் சாதனையை முறியடித்துள்ளார்.

இலங்கை சுற்றுப்பயணத்தில், இந்திய அணியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல், தொடர்ச்சியாக மூன்றாவது போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார். இலங்கை கிரிக்கெட் XI அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சதம் அடித்த அவர், தொடரின் முதல் டெஸ்டிலும் சதம் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இந்த நிலையில், கொழும்புவில் உள்ள சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், படிக்கல் மீண்டும் ஒரு சதம் அடித்தார். அவர் 168 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது இரண்டாவது சதமாகும்.

புஜாராவின் சாதனையை சமன் செய்த படிக்கல்

இந்திய அணிக்காக 3-ம் நிலை வீரராக களமிறங்கி, அடுத்தடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்ததன் மூலம், முன்னாள் வீரர் புஜாராவின் சாதனையை படிக்கல் சமன் செய்துள்ளார். இதற்கு முன்பு, 2018-19ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் புஜாரா இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார். அப்போது, மெல்போர்ன் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 106 ரன்களும், சிட்னி டெஸ்டில் 193 ரன்களும் புஜாரா எடுத்திருந்தார். அதன்பிறகு, வேறு எந்த இந்திய 3-ம் நிலை பேட்ஸ்மேனும் அடுத்தடுத்த டெஸ்ட்களில் சதம் அடிக்கவில்லை. தற்போது அந்த சாதனையை படிக்கல் சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க: AUS vs BAN 2nd Test: ஸ்டார்க் வேகத்தில் சிதறிய வங்கதேசம்.. ஆஸ்திரேலியா பதிலடி.. இரண்டே நாளில் முடிந்த போட்டி!

117 ரன்களில் ஆட்டமிழந்த படிக்கல்

சதம் அடித்த பிறகு, தேவ்தத் படிக்கல் 117 ரன்களில் ஆட்டமிழந்தார். 193 பந்துகளைச் சந்தித்த அவரது இன்னிங்ஸில் ஒரு டஜன் பவுண்டரிகள் அடங்கும். கேஷரா நுவந்தாவின் பந்துவீச்சில் அவர் போல்ட் ஆனார். அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்ததன் மூலம், இந்திய அணியின் 3-ம் நிலை வீரருக்கான தனது இடத்தை அவர் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளார். இந்த தொடருக்கு முன்பு வரை இந்திய அணியில் நிரந்தர இடம் இல்லாமல் இருந்த படிக்கல், இப்போது அணியின் நம்பிக்கைக்குரிய வீரராக மாறியுள்ளார்.

இதற்கிடையே இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. தேவ்தத் படிக்கல் சதத்தை தவிர கேப்டன் சுப்மன் கில் (50) அரை சதம் அடித்து அவுட் ஆனார். ஜெய்ஸ்வால் 45 ரன்களும், ஜடேஜா 43 ரன்களும் அடித்தனர். இலங்கை அணி தரப்பில் அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையும் படிங்க: Manav Suthar: சுழலில் இலங்கையை சுருட்டிய மானவ் சுதார்! காலே டெஸ்டில் இந்தியா அபார வெற்றி

கேப்டன் சுப்மன் கில்லும் சாதனை

2வது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய கேப்டன் சுப்மன் கில்லும் ஒரு சாதனை படைத்துள்ளார். அதாவது கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களைக் கடந்து ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளார். முதல் செஷனில், கில் 13 ரன்கள் எடுத்திருந்தபோது இந்த சாதனையை நிகழ்த்தினார். இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கில், 77 இன்னிங்ஸ்களில் 3,004 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 43.53. இதில் 11 சதங்களும், 8 அரைசதங்களும் அடங்கும். அவரது ஸ்டிரைக் ரேட் 61.59 ஆக உள்ளது.

கில் தனது 26 வயது 349 நாட்களில் இந்த சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்த நான்காவது இளம் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார். அவர் தனது 23 வயது 228 நாட்களில் இந்த மைல்கல்லை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

AUS vs BAN 2nd Test: ஸ்டார்க் வேகத்தில் சிதறிய வங்கதேசம்.. ஆஸ்திரேலியா பதிலடி.. இரண்டே நாளில் முடிந்த போட்டி!
Colombo Test: இலங்கையை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா? கில்லின் மாஸ்டர் பிளான்!