இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டிக்கான லைவ் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

11:41 PM (IST) Jul 06
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வீழ்த்திய ஆகாஷ் தீப் 49 ஆண்டு கால சாதனையை தகர்த்துள்ளார்.
10:03 PM (IST) Jul 06
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
09:43 PM (IST) Jul 06
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2வது போட்டியில் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. 2வது இன்னிங்சில் 608 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 271 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். பர்மிங்காங் எட்ஜ்பாஸ்டனில் இதுவரை எந்த வெற்றியும் பெறாத இந்தியா முதன்முறையாக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
07:43 PM (IST) Jul 06
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி உணவு இடைவேளை வரை 153/6 என்ற நிலையில் உள்ளது. இன்னும் 55 ஓவர்கள் உள்ள நிலையில், இந்திய அணி மீதமுள்ள 4 விக்கெட்டுகளையும் சாய்த்தால் வரலாற்று வெற்றியை பெறலாம். இங்கிலாந்தின் ஜேமிஸ் ஸ்மித் (32), கிறிஸ் வோக்ஸ் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். வாஷிங்டன் சுந்தர், சிராஜ் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
06:36 PM (IST) Jul 06
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பவுலிங்கில் அசத்தி வரும் முகமது சிராஜின் சொத்து மதிப்பு குறித்து பார்ப்போம்.
05:40 PM (IST) Jul 06
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து 2 விக்கெட் இழந்துள்ளது. ஆலி போப் 24 ரன்கள் எடுத்து ஆகாஷ் தீப்பின் சூப்பர் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். ஹாரி ப்ரூக் 23 ரன்னில் ஆகாஷ் தீப் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இங்கிலாந்து 87/5 என தடுமாறி வருகிறது. ஆகாஷ் தீப் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். இன்னும் 5 விக்கெட் வீழ்த்தினால் இந்திய அணி வரவாற்று சிறப்புமிக்க வெற்றி பெறும்.
05:11 PM (IST) Jul 06
இந்தியா, இங்கிலாந்து இடையே 2வது டெஸ்ட் போட்டியின் 5ம் நாள் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், மழை நின்றதால் மீண்டும் ஆட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 72/3 என்ற நிலையில், அந்த அணி வெற்றிக்கு 536 ரன்கள் தேவை. அதே வேளையில் இந்தியா 7 விக்கெட் வீழ்த்தினால் வெற்றி பெறலாம். மழையால் ஆட்டம் தாமதமானதால் இன்றைய கடைசி நாளில் 80 ஓவர்கள் மட்டுமே வீசப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
03:28 PM (IST) Jul 06
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இன்றைய கடைசி நாளில் 7 விக்கெட் வீழ்த்தி இந்தியா வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அதற்கு தடை போடும் விதமாக போட்டி நடக்கும் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதனால் 5ம் நாள் ஆட்டம் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 72/3 என்ற நிலையில் உள்ளது. அந்த அணி வெற்றி பெற 536 ரன்கள் தேவை. அதே வேளையில் இந்தியா 7 விக்கெட் வீழ்த்தினால் வெற்றியை ருசிக்கலாம். ஆனால் அதற்கு மழை வேட்டு வைத்து வருகிறது.