IPL 2021 #SRHvsPBKS ஒரேயொரு தோல்வி.. ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்கு காத்திருக்கும் அசிங்கம்

Published : Sep 25, 2021, 03:01 PM IST
IPL 2021 #SRHvsPBKS ஒரேயொரு தோல்வி.. ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்கு காத்திருக்கும் அசிங்கம்

சுருக்கம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 14வது சீசனில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் பஞ்சாப் கிங்ஸும் மோதுகின்றன. இந்த போட்டி சிறிய மைதானமான ஷார்ஜாவில் நடக்கிறது.

இந்த சீசனில் இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 7ல் தோற்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஒரேயொரு வெற்றியை மட்டுமே புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் நிலையில், இந்த சீசனில் பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. இன்று சன்ரைசர்ஸ் ஆடும் போட்டி, இந்த சீசனில் அந்த அணியின் 9வது போட்டி. பஞ்சாப்புக்கு எதிரான இன்றைய போட்டியில் தோல்வியடையும் பட்சத்தில், ஐபிஎல் லீக் சுற்றில் முதல் 9 போட்டிகளில் 8 தோல்வியடைந்த 2வது அணி என்ற மோசமான சாதனையை படைக்கும் சன்ரைசர்ஸ் அணி.

இதற்கு முன்பாக 2009 ஐபிஎல்லில் கேகேஆர் அணி, லீக் சுற்றின் முதல் 9 போட்டிகளில் 8ல் தோல்வியடைந்தது. இந்நிலையில், இன்றைய சன்ரைசர்ஸ் அணி தோற்றால், இந்த மோசமான சாதனையில் கேகேஆருக்கு அடுத்த இடத்தை பிடிக்கும்.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

டேவிட் வார்னர், ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன்(கேப்டன்), மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், ஜேசன் ஹோல்டர், அப்துல் சமாத், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் ஷர்மா, கலீல் அகமது.

உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:

கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், மார்க்ரம், பூரன், தீபக் ஹூடா, ஃபேபியன் ஆலன், கிறிஸ் ஜோர்டான், ஹர்ப்ரீத் ப்ரார், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, ரவி பிஷ்னோய்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ T20: பேட்டிங் ஸ்டைலை மாற்றுகிறாரா சூர்யகுமார்?.. அவரே சொன்ன அதிரடி பதில்!
IND VS NZ முதல் டி20.. ஷ்ரேயாஸ் ஐயர் இடத்துக்கு 'ஆப்பு' வைத்த இளம் வீரர்.. பிளேயிங் லெவன்!