ICC WTC புள்ளி பட்டியல்:முதலிடத்தில் இலங்கை, 4ம் இடத்தில் தென்னாப்பிரிக்கா!பின்னாடி கிடக்கும் இந்தியா, நியூசி

Published : Mar 01, 2022, 04:39 PM IST
ICC WTC புள்ளி பட்டியல்:முதலிடத்தில் இலங்கை, 4ம் இடத்தில் தென்னாப்பிரிக்கா!பின்னாடி கிடக்கும் இந்தியா, நியூசி

சுருக்கம்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில், வெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிய இலங்கை அணி இன்னும் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியாவிற்கு எதிரான 2 டெஸ்ட் வெற்றி மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு வெற்றியை பெற்ற தென்னாப்பிரிக்க அணி நான்காமிடத்தில் உள்ளது.  

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில்  முதல் டைட்டிலை நியூசிலாந்து அணி வென்றது. நியூசிலாந்தும் இந்தியாவும் ஃபைனலில் மோதிய நிலையில், இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது.

அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் நடந்துவருகின்றன. வெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி அந்த இரண்டிலும் வெற்றி பெற்ற இலங்கை அணி 100 சதவிகித வெற்றியுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியாவிற்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ள இலங்கை அணி, முதலிடத்தை இழக்கும் வாய்ப்புள்ளது.

86.66 சதவிகித வெற்றியுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாமிடத்திலும், 75 சதவிகித வெற்றியுடன் பாகிஸ்தான் அணி மூன்றாமிடத்திலும் உள்ளது.

இந்தியாவிற்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், ஒன்றில் மட்டுமே தோற்று, மற்ற 2 போட்டிகளில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2வது போட்டியில் வெற்றி பெற்றது. 3 டெஸ்ட் வெற்றிகளை பெற்றுள்ள தென்னாப்பிரிக்க அணி 50 சதவிகித வெற்றியுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஃபைனலில் மோதிய இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முறையே 5 மற்றும் 6ம் இடத்தில் உள்ளன. ஆஷஸ் தொடரில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணி, வெறும் 9.25 சதவிகித வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

Asian Games 2026: வெறும் 5 ஓவரில் ஜப்பானை ஊதித்தள்ளிய இந்திய மகளிர் அணி.. செமி பைனலுக்கு என்ட்ரி!
Abhishek Sharma: ஆத்தாடி! என்னா அடி! சிக்சர் மழை.. வெறும் 30 பந்தில் சதம்.. அபிஷேக் சர்மா உலக சாதனை!