ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: தென்னாப்பிரிக்காவை 2ம் இடத்திற்கு இறக்கிவிட்ட இங்கிலாந்து

By karthikeyan VFirst Published Aug 29, 2022, 11:02 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்வியால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு இறங்கிவிட்டது தென்னாப்பிரிக்க அணி.
 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் ஃபைனலில் மோதும். டெஸ்ட் போட்டிகளில் அணிகள் பெறும் வெற்றிகளின் சதவிகிதங்கள் அடிப்படையில் அணிகள் புள்ளி பட்டியலில் வரிசைப்படுத்தப்படுகின்றன.

அந்தவகையில், அதிக வெற்றிகளை பெறும் அணிகளால் தான், புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்து ஃபைனலுக்கு முன்னேற முடியும்.

இதையும் படிங்க - டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக புவனேஷ்வர் குமார் புதிய சாதனை..! ஹர்திக் பாண்டியாவின் சாதனை தகர்ப்பு

கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப்  ஃபைனலில் ஆடிய இந்தியாவும் நியூசிலாந்தும் இம்முறை பின் தங்கியுள்ளன. இம்முறை தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் தென்னாப்பிரிக்க அணி, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற பின், 75 சதவிகித வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை வலுவாக தக்கவைத்தது. ஆனால் 2வது டெஸ்ட்டில் இங்கிலாந்திடம் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததால் வெற்றி சதவிகிதம் 75லிருந்து 66.67 சதவிகிதமாக குறைந்தது.

இதையும் படிங்க - சீனியர் பிளேயர்ஸ்னுதான் பேரு.. 2 பேருமே மொக்கை ஷாட் ஆடி அவுட்டாகிட்டாங்க..! கவாஸ்கர் கடும் தாக்கு

எனவே புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு பின் தங்கியது தென்னாப்பிரிக்க அணி. 70 சதவிகிதத்துடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் இலங்கை அணி 3ம் இடத்திலும், இந்திய அணி 4ம் இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் அணி 5ம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 35.19 சதவிகிதத்துடன், கடைசியிலிருந்து 3வது இடத்தில் அதாவது 7ம் இடத்தில் உள்ளது.
 

click me!