சச்சினை விட சிறந்த வீரர் ராயுடு..? ஆனாலும் உலக கோப்பை அணியில் எடுக்கல.. பகீர் கிளப்பிய ஐசிசி

By karthikeyan VFirst Published Apr 16, 2019, 11:56 AM IST
Highlights

பேட்டிங், பவுலிங்கை கடந்து விஜய் சங்கர் நல்ல ஃபீல்டரும் கூட. அந்தவகையில் ராயுடுவிற்கு பதிலாக விஜய் சங்கரை எடுப்பது அனைத்து வகையிலும் இந்திய அணிக்கு வலு சேர்க்கும் என்பதால், விஜய் சங்கர் உலக கோப்பை அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.
 

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், 15 வீரர்களை கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு அடுத்தபடியாக இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித், தவான், தோனி, ராகுல், கேதர், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் ஆகிய வீரர்கள் ஏற்கனவே உறுதியான ஒன்று. 

4ம் வரிசை வீரர், மாற்று விக்கெட் கீப்பர், நான்காவது ஃபாஸ்ட் பவுலர் ஆகிய இடங்களை யார் பிடிக்கப்போகிறார்கள் என்பதுதான் பெரிய கேள்வியாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்காம் வரிசையில் ரஹானே, ரெய்னா, மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ராயுடு உள்ளிட்ட பல வீரர்கள் பரிசோதிக்கப்பட்டனர். இவர்களில் ராயுடு உறுதி செய்யப்பட்டார். ஆனால் அவர் தொடர்ந்து சீராக ஆடாததால் அவருக்கான இடத்தை உறுதி செய்ய தவறிவிட்டார்.

இதற்கிடையே மிடில் ஆர்டரில் விஜய் சங்கர் சிறப்பாக ஆடினார். சிங்கிள் ரொடேட் செய்து ஆடுவதோடு அவ்வப்போது பெரிய ஷாட்டுகளையும் ஆடினார். நியூசிலாந்துக்கு எதிராக மிடில் ஆர்டரில் அவரது பொறுப்பான பேட்டிங் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடந்த ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை திரில் வெற்றி பெற செய்தார். 

பேட்டிங், பவுலிங்கை கடந்து விஜய் சங்கர் நல்ல ஃபீல்டரும் கூட. அந்தவகையில் ராயுடுவிற்கு பதிலாக விஜய் சங்கரை எடுப்பது அனைத்து வகையிலும் இந்திய அணிக்கு வலு சேர்க்கும் என்பதால், விஜய் சங்கர் உலக கோப்பை அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்திய பேட்ஸ்மேன்களின் 20 இன்னிங்ஸ்களில் அவர்களது பேட்டிங் சராசரியை பதிவிட்டு ஐசிசி ஒரு கேள்வி எழுப்பியுள்ளது. குறைந்தது 20 இன்னிங்ஸ்களின் அடிப்படையில் பார்க்கும்போது அதிகமான பேட்டிங் சராசரியை கொண்டுள்ள வீரர்களின் பட்டியலில் விராட் கோலி, தோனி, ரோஹித் சர்மாவிற்கு அடுத்தபடியாக ராயுடு உள்ளார். சச்சின் டெண்டுல்கரே ராயுடுவிற்கு பின்னால் தான் உள்ளார். சச்சினுக்கு மேலே ராயுடு உள்ளார். அதை குறிப்பிட்டு, நல்ல பேட்டிங் சராசரி உள்ள ராயுடு உலக கோப்பை அணியில் எடுக்கப்படவில்லை என ஐசிசி பதிவிட்டுள்ளது. 

Highest batting averages for India in ODI cricket (min. 20 innings):

1. – 59.57
2. – 50.37
3. – 47.39
4. – 47.05
5. – 44.83

Rayudu was excluded from India's squad. Do you think he should have made the cut? pic.twitter.com/8Eu0ztKTH1

— ICC (@ICC)

ராயுடு அணியில் எடுக்கப்படாதது குறித்து ஐசிசி டுவிட்டரில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ராயுடுவின் சராசரி என்ன என்பது முக்கியமல்ல. தற்போதைய ஃபார்மும், அணிக்கு இப்போதைக்கு என்ன மாதிரியான வீரர் தேவை என்பதும்தான் முக்கியம். அந்த வகையில் விஜய் சங்கரின் தேர்வு சரிதான். 
 

click me!