2021ம் ஆண்டின் சிறந்த டி20 லெவன்..! ஐசிசி தேர்வு செய்த அணியில் ஒரு இந்திய வீரர் கூட இல்ல

By karthikeyan VFirst Published Jan 19, 2022, 8:37 PM IST
Highlights

2021ம் ஆண்டின் சிறந்த டி20 லெவனை ஐசிசி தேர்வு செய்துள்ளது.
 

2021ம் ஆண்டின் சிறந்த டி20 லெவனை ஐசிசி தேர்வு செய்துள்ளது. ஐசிசி தேர்வு செய்த டி20 லெவனில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

2021ம் ஆண்டில் 14 டி20 போட்டிகளில் ஆடி 589 ரன்களை குவித்த இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் மற்றும் கடந்த ஆண்டில் 1326 ரன்களை குவித்துள்ள பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளது ஐசிசி.

3ம் வரிசையில் பாகிஸ்தான் கேப்டனான பாபர் அசாமை தேர்வு செய்த ஐசிசி, அவரையே இந்த அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரமை 4ம் வரிசை வீரராகவும், ஆஸ்திரேலிய அணி டி20 உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்த மிட்செல் மார்ஷை 5ம் வரிசை வீரராகவும் தேர்வு செய்துள்ள ஐசிசி, 6ம் வரிசை வீரராகவும் ஃபினிஷராகவும் டேவிட் மில்லரை தேர்வு செய்துள்ளது. ஸ்பின்னர்களாக நம்பர் 1 டி20 ஸ்பின்னர் ஷாம்ஸி மற்றும் இலங்கை ஸ்பின்னர் வனிந்து ஹசரங்கா ஆகிய இருவரையும், ஃபாஸ்ட் பவுலர்களாக ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட், வங்கதேசத்தின் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் மற்றும் பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடி ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளது ஐசிசி.

ஐசிசி தேர்வு செய்த இந்த அணியில் அதிகபட்சமாக பாகிஸ்தானை சேர்ந்த 3 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை.

ஐசிசி தேர்வு செய்த 2021ம் ஆண்டின் சிறந்த டி20 லெவன்:

ஜோஸ் பட்லர், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், டேவிட் மில்லர், ஷாம்ஸி, ஜோஷ் ஹேசில்வுட், வனிந்து ஹசரங்கா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான், ஷாஹீன் அஃப்ரிடி.
 

click me!