உலகக் கோப்பை 2023: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு!

By Rsiva kumar  |  First Published Jul 11, 2023, 10:13 AM IST

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா நடத்தும் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் கொல்கத்தா, புனே, சென்னை, அகமதாபாத், டெல்லி, தர்மசாலா, பெங்களூரு, லக்னோ, ஹைதராபாத், மும்பை என்று 10 மைதானங்களில் நடக்கிறது. இது தவிர கவுகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மைதானங்களில் பயிற்சி போட்டிகள் நடக்கிறது.

தமிழில் ஒரு கெட்ட வார்த்தை கூட தெரியாது, மற்ற மொழிகளில் தெரியும் – எம்.எஸ்.தோனி!

Tap to resize

Latest Videos

இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்ற நிலையில், உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிகள் மூலமாக இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் அடுத்தடுத்த தகுதி பெற்றன. ஒவ்வொரு மைதானத்திலும் 5 போட்டிகள் நடக்கிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து உலகக் கோப்பை 2023 முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது.

சென்னை ரொம்பவே ஸ்பெஷல்: சென்னைக்காரங்க என்னை எப்போதோ தத்தெடுத்துவிட்டனர் – எம்.எஸ்.தோனி!

இந்தியா, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. இதையடுத்து 15 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடக்கிறது.

இந்த நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டிகளுக்கான டிக்கெட் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கான போட்டிக்கான அப்பட் டயர் டிக்கெட்டுக்கான குறைந்தபட்ச விலை ரூ.900 என்றும், டி, ஹெச் பிளாக் சீட்டுகளுக்கு ரூ.1500 என்றும், சி, கே பிளாக் சீட்டுகளுக்கு ரூ.2500 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5ஆவது பவுலராக யாருக்கு வாய்ப்பு? முகேஷ் குமார், நவ்தீப் சைனி, ஜெயதேவ் உனத்கட் கடும் போட்டி!

அதோடு இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டிக்கான பி மற்றும் எல் பிளாக் சீட்டுகளுக்கு அதிகபட்ச விலை ரூ.3000 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா ஈடன் மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் நெதர்லாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கான இடையிலான போட்டி வரும் அக்டோபர் 28 ஆம் தேதியும், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி அக்டோபர் 31 ஆம் தேதியும், நவம்பர் 5 ஆம் தேதி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!