இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினூ மன்கட், சங்கக்கரா, ஆண்டி ஃப்ளவருக்கு ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் விருது

Published : Jun 13, 2021, 09:28 PM IST
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினூ மன்கட், சங்கக்கரா, ஆண்டி ஃப்ளவருக்கு ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் விருது

சுருக்கம்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினூ மன்கட், இலங்கை முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கரா, ஆண்டி ஃப்ளவர் உள்ளிட்ட 10 வீரர்களுக்கு ஹால் ஆஃப் ஃபேம் விருதை வழங்கி கௌரவித்தது ஐசிசி.  

சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பங்காற்றிய சிறந்த வீரர்களுக்கு ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் விருதை வழங்கி கௌரவித்துவருகிறது.

இந்த ஆண்டுக்கான ஹால் ஆஃப் ஃபேம் விருது வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடிய மொத்தம் 10 முன்னாள் ஜாம்பவான்களுக்கு ஹால் ஆஃப் ஃபேம் விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது ஐசிசி.

1946ம் ஆண்டிலிருந்து 1956ம் ஆண்டுவரை இந்திய அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ஆல்ரவுண்டர் வினூ மன்கட்டிற்கு ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் விருதை வழங்கி கௌரவித்துள்ளது. ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற 7வது இந்திய வீரர் வினூ மன்கட்.

இதற்கு முன், பிஷன் சிங் பேடி(2009), சுனில் காவஸ்கர்(2009), கபில் தேவ்(2009), அனில் கும்ப்ளே(2015), ராகுல் டிராவிட்(2018), சச்சின் டெண்டுல்கர் ( 2019) ஆகிய இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அதேபோல இலங்கை முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கரா, ஜிம்பாப்வே முன்னாள் கேப்டன் ஆண்டி ஃபிளவர் உட்பட மொத்தம் 10 வீரர்கள் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றுள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

Ind vs NZ: கோலி, ரோகித் இன்.. 3 வீரர்களுக்கு கல்தா கொடுத்த தேர்வு குழு..?
ரோகித், விராட் கோலி ரசிகர்களே ரெடியா? அடுத்த மேட்ச் எப்போது? லைவ் உண்டா?