இந்தூர் பிட்ச் படுமட்டம்லாம் இல்ல.. தீர்ப்பை திருத்தி எழுதிய ஐசிசி.! பிசிசிஐ-யின் அப்பீலுக்கு கிடைத்த வெற்றி

By karthikeyan VFirst Published Mar 27, 2023, 2:24 PM IST
Highlights

இந்தூர் பிட்ச்சை படுமோசம் என்ற ஐசிசி-யின் மதிப்பீட்டை எதிர்த்து பிசிசிஐ செய்த அப்பீலை அடுத்து, அதை மறுசீராய்வு செய்த ஐசிசி அப்பீல் பேனல் இந்தூர் பிட்ச் சராசரிக்கும் கீழான பிட்ச் என்று கூறியுள்ளது. பழைய மதிப்பீட்டை திருத்தியுள்ளது.
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இந்திய அணி வென்றது. நாக்பூர் மற்றும் டெல்லியில் நடந்த முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியும், இந்தூரில் நடந்த 3வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றன. அகமதாபாத்தில் நடந்த 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து 2-1 என டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது.

இந்திய மண்ணில் 2012ம் ஆண்டிலிருந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோற்றதேயில்லை. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடந்த இந்தூர் ஆடுகளத்தில் முதல் ஓவரிலிருந்தே பந்து திரும்பியது. வெறும் 2 நாள் மற்றும் ஒரு மணி நேரத்தில் அந்த போட்டி முடிவடைந்தது. இதையடுத்து அந்த ஆடுகளத்தின் மீது விமர்சனங்கள் எழுந்தன.

டி காக் சதம்; தென்னாப்பிரிக்கா காட்டுத்தனமான பேட்டிங்! டி20-யில் மிகப்பெரிய ரன் சேஸிங்கை செய்து வரலாற்று சாதனை

இந்தியாவின் பலமான ஸ்பின்னிற்கு சாதகமாக இந்திய அணி ஆடுகளங்களை தயார் செய்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்களும், முன்னாள் வீரர்களும் இந்திய ஆடுகளங்களை விமர்சித்தனர். ஆனால் முதல் 2 போட்டிகளில் சொதப்பிய ஆஸ்திரேலிய அணி, இந்தூர் டெஸ்ட்டில் சுதாரிப்புடன் ஆடி இந்திய அணியை வீழ்த்தியது. 

இந்தூர் ஆடுகளத்தில் பந்து முதல் ஓவரிலிருந்தே திரும்பியதுடன், இரண்டே நாள் மற்றும் ஒரு மணி நேரத்தில் ஆட்டம் முடிவடைந்ததால் இந்த ஆடுகளத்தை மதிப்பீடு செய்த ஐசிசி, இந்தூர் ஆடுகளம் மோசமானது என்று மதிப்பீடு செய்ததுடன், 3 டீமெரிட் புள்ளிகளையும் வழங்கியது.  இந்த போட்டியின் ரெஃப்ரி கிறிஸ் பிராட், இந்தூர் ஆடுகளம் மோசமானது என்று மதிப்பீடு செய்தார். இதற்கு முன் கடைசியாக 2017ம் ஆண்டு புனே ஆடுகளம் மோசமானது என ஐசிசியால் மதிப்பீடு செய்யப்பட்டது. அந்த போட்டிக்கும் கிறிஸ் பிராட் தான் ரெஃப்ரி.

இந்நிலையில், இந்தூர் ஆடுகளத்தை மோசமானது என்று ஐசிசி மதிப்பீடு செய்ததை எதிர்த்து பிசிசிஐ மேல்முறையீடு செய்தது. கடந்த ஆண்டு பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் ராவல்பிண்டி ஆடுகளம் இதேபோல் ஐசிசியால் மோசமானது என மதிப்பீடு செய்யப்பட்டு டீமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டன. ஆனால் அதை எதிர்த்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மேல்முறையீடு செய்து ஜெயித்தது. அதேபோல பிசிசிஐயும் ஐசிசியின் இந்தூர் ஆடுகள மதிப்பீட்டிற்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தது.

ஒரே இன்னிங்ஸில் அந்த பையன் என் கெரியரை முடிச்சு வச்சுட்டான் - ஷிகர் தவான்

இதையடுத்து இந்தூர் ஆடுகளத்தை மறுசீராய்வு செய்த ஐசிசி அப்பீல் பேனல், ஏற்கனவே வழங்கப்பட்ட மோசமான பிட்ச் என்ற மதிப்பீட்டை திருத்தி சராசரிக்கு கீழான பிட்ச் என்று மதிப்பீடு வழங்கியுள்ளது. அதனால் டீமெரிட் புள்ளிகள் 3லிருந்து 1 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
 

click me!