இளம் ஸ்பின் பவுலருக்கு ஓராண்டு தடை.. ஐசிசி அதிரடி

By karthikeyan VFirst Published Sep 21, 2019, 4:43 PM IST
Highlights

இலங்கை அணியின் இளம் ஸ்பின் பவுலர் அகிலா தனஞ்செயாவுக்கு ஓராண்டு தடை விதித்து ஐசிசி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 

நியூசிலாந்து அணி அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் டி20 தொடரிலும் ஆடியது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை ஸ்பின்னர் அகிலா தனஞ்செயா மற்றும் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ஆகியோரது பவுலிங் ஆக்‌ஷன் சந்தேகத்திற்குரிய வகையில் இருப்பதாக ஐசிசியிடம் புகார் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து தனஞ்செயாவின் பவுலிங் ஆக்‌ஷன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது, தனஞ்செயாவின் பவுலிங் ஆக்‌ஷன் ஐசிசி விதிகளுட்பட்டது இல்லை என்பதால் அவருக்கு ஓராண்டு பந்துவீச தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

இவர் ஏற்கனவே ஒருமுறை முறையற்ற பவுலிங் ஆக்‌ஷனில் பந்துவீசியதால் அவருக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் பவுலிங் ஆக்‌ஷனில் கவனம் செலுத்தி மீண்டும் ஐசிசியிடம் பந்துவீசி காட்டி தடையிலிருந்து மீண்டார். தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய பவுலிங் ஆக்‌ஷனால் மறுபடியும் தடை பெற்றுள்ளார் தனஞ்செயா. 

ஓராண்டுக்கு தனஞ்செயா பந்துவீசக்கூடாது என ஐசிசி தடை விதித்துள்ளது. 
 

click me!