அண்டர்19 (யு19) உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் ஜனவரி மாதம் நடக்க இருக்கிறது. இலங்கையில் நடக்க இருந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை காரணமாக உலகக் கோப்பை தொடரானது தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து தென் ஆப்பிரிக்காவில் நடக்க இருக்கும் யு19 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில், 4 குரூப்களிலும் எந்தெந்த அணிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியா, வங்கதேசம், ஸ்காட்லாந்து, பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே, நமீபியா, நியூசிலாந்து, நேபாள், அயர்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் என்று 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் ஏ பிரிவில் – இந்தியா, வங்கதேசம், அயர்லாந்து, அமெரிக்கா.
குரூப் பி பிரிவில் - இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து.
குரூப் சி பிரிவில் – ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, நமீபியா
குரூப் டி பிரிவில் – ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து, நேபாள்.
இந்த குரூப் உள்ள 4 அணிகளில் தலா 3 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறும். இதையடுத்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடக்கிறது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளின் போது மழை பெய்தால் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது. யு19 உலகக் கோப்பை தொடரானது வரும் ஜனவரி 19 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 11 ஆம் தேதி வரையில் தென் ஆப்பிரிக்காவில் நடக்கிறது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இந்திய அணியில் இடம் பெறுவார்கள்.
U19 Men's World Cup schedule. pic.twitter.com/AGFTcVR1GA
— Mufaddal Vohra (@mufaddal_vohra)