டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு – குரூப் சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை!

Published : Jan 05, 2024, 08:39 PM ISTUpdated : Jan 05, 2024, 09:03 PM IST
டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு – குரூப் சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை!

சுருக்கம்

டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரையில் நடக்க இருக்கிறது என்று ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு முறை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடந்தது. இதில், இங்கிலாந்து அணி சாம்பியனானது. இதையடுத்து, இந்த 2024 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின்!

டி20 உலகக் கோப்பை தொடரானது வரும் ஜூன் 1ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த உலகக் கோபை தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இணைந்து நடத்துகின்றன. இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், நேபாள், நியூசிலாந்து, நெதர்லாந்து, பாகிஸ்தான், நமீபியா, ஓமன், பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா உகாண்டா, கனடா என்று 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

MS Dhoni File Criminal Case: ஏமாற்றி ரூ.15 கோடி மோசடி – முன்னாள் தொழில் கூட்டாளிகள் மீது தோனி புகார்!

இந்த 20 அணிகளும் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இந்தப் போட்டிகள் ஜூன் 1ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையில் நடைபெறும். இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இந்த சூப்பர் 8 சுற்றானது 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். இதில், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்த சூப்பர் 8 சுற்று போட்டிகள் ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 24 ஆம் தேதி வரையில் நடைபெறும்.

12 வயதில் ரஞ்சி டிராபியில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி – 12 வயதா? 14 வயதா? வயதில் குளறுபடி!

ஜூன் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் முதல் மற்றும் 2ஆவது அரையிறுதிப் போட்டிகள் நடத்தப்படும். கடைசியாக ஜூன் 29ஆம் தேதி இறுதிப் போட்டி நடத்தப்படுகிறது. ஜூன் 1 ஆம் தேதி நடக்கும் முதல் போட்டியிலேயே குரூப் ஏ பிரிவில் உள்ள அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி டல்லாஸில் நடக்கிறது. இந்திய அணி விளையாடும் 4 போட்டிகளும் அமெரிக்காவில் நடத்தப்படுகிறது.

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே….சின்ன வயசுல விளையாடிய ரிங்கா ரிங்கா ரோசஸ் - வைரலாகும் வீடியோ!

இந்தியா விளையாடும் போட்டிகள்:

ஜூன் 5 – இந்தியா – அயர்லாந்து – நியூயார்க்

ஜூன் 9 – இந்தியா – பாகிஸ்தான் – நியூயார்க்

ஜூன் 12 – இந்தியா – அமெரிக்கா – நியூயார்க்

ஜூன் 15 – இந்தியா – கனடா – லாடர்ஹில் (ஃபுளோரிடா)

இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதில், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு ரிசர்வ் டே இருக்கிறது.

குரூப் ஏ:

இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா

குரூப் பி:

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன்

குரூப் சி:

நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பாப்புவா நியூ கினியா,

குரூப் டி:

தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து, நேபாள்

 

 

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!
வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!