நாங்களும் சளைச்சவங்க இல்லடா.. ஹைதராபாத் நிர்ணயித்த கடின இலக்கை வெறித்தனமா விரட்டிய கோவா..! த்ரில்லான முடிவு

By karthikeyan VFirst Published Feb 28, 2021, 7:58 PM IST
Highlights

ஹைதராபாத்துக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 346 ரன்கள் என்ற கடின இலக்கை வெறித்தனமாக விரட்டிய கோவா அணி, 2 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
 

ஹைதராபாத்துக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 346 ரன்கள் என்ற கடின இலக்கை வெறித்தனமாக விரட்டிய கோவா அணி, 2 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

விஜய் ஹசாரே தொடரில் ஹைதராபாத் மற்றும் கோவா அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று சூரத்தில் நடந்தது. டாஸ் வென்ற கோவா அணி ஹைதராபாத்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்ததையடுத்து, முதலில் பேட்டிங் ஆடிய ஹைதராபாத் அணி, தன்வாய் அகர்வால்(150) மற்றும் திலக் வர்மா(128) ஆகிய இருவரின் அபார சதத்தால் 50 ஓவரில் 345 ரன்களை குவித்தது. அவர்கள் இருவரைத்தவிர வேறு யாரும் சரியாக ஆடவில்லை.

இதையடுத்து 346 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய கோவா அணியின் தொடக்க வீரர் ஏக்நாத் கேர்கர் மற்றும் 3ம் வரிசை வீரர் ஸ்னேகல் சுஹாஸ் கௌதாங்கர் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி சதமடித்தனர். ஏக்நாத் கேர்கர் 143 பந்தில் 169 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். 

கௌதாங்கர் 116 ரன்களை குவித்தார். ஏக்நாத் கேர்கர் 169 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் இருந்தும் கூட, கோவா அணியால் இலக்கை எட்ட முடியவிலை. 50 ஓவரில் 343 ரன்களை குவித்த கோவா அணி, 2 ரன் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவியது.
 

click me!