கும்ப்ளே, ஹர்பஜனை உயர்த்தி பேசிய யுவராஜ்..! அஷ்வின் ரியாக்‌ஷன்

By karthikeyan VFirst Published Feb 28, 2021, 4:30 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்போட்டி நடந்த அகமதாபாத் மாதிரியான ஆடுகளங்களில் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் ஆடியிருந்தால் 1000 மற்றும் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார்கள் என்ற யுவராஜ் சிங்கின் கருத்துக்கு அஷ்வின் ரியாக்ட் செய்துள்ளார்.
 

இந்தியா இங்கிலாந்து இடையே அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டி, 2ம் நாளே முடிந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி, 2ம் நாளே முடிந்தது அனைவருக்கும் வியப்பளித்தது. இந்த போட்டியில் முழுக்க முழுக்க ஸ்பின்னர்களே ஆதிக்கம் செலுத்தினர்.

இந்திய அனியின் இடது கை ஸ்பின்னர் அக்ஸர் படேல், 11 விக்கெட்டுகளையும், சீனியர் ஸ்பின்னர்  அஷ்வின் 7விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி கேப்டனும் ஆஃப் ஸ்பின்னருமான ஜோ ரூட் 5 விக்கெட்டுகளையும், ஜாக் லீச்  4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் மொத்தம் 30 விக்கெட்டுகள் விழுந்தன. அதில் 28 விக்கெட்டுகள் ஸ்பின்னர்கள் வீழ்த்தியவை. அதில் 21 விக்கெட்டுகள், திரும்பாமல் நேராக வந்த பந்தில் விழுந்த விக்கெட்டுகள்.

இதையடுத்து அகமதாபாத் பிட்ச்சை மைக்கேல் வான், டேவிட் லாய்ட் உள்ளிட்ட இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர். கவாஸ்கர், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய முன்னாள், இந்நாள் வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் தோற்றுப்போன வயிற்றெரிச்சலில் விமர்சனம் செய்கின்றனர் என்றால், இந்திய முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கும் அந்த பிட்ச்சை விமர்சிக்கும் வகையில் டுவீட் செய்துள்ளார்.

இதுகுறித்த டுவீட்டில், இரண்டே நாளில் டெஸ்ட் போட்டி முடிந்துவிட்டது. இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லதா என்று தெரியவில்லை. அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் இந்த மாதிரியான பிட்ச்களில் பந்துவீசியிருந்தால் முறையே 1000 மற்றும் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார்கள். எனினும், அக்ஸர் படேல் மற்றும் அஷ்வினுக்கு வாழ்த்துக்கள் என்று யுவராஜ் சிங் தெரிவித்தார்.

யுவராஜ் சிங்கின் டுவீட், இந்த மாதிரியான ஆடுகளங்களில் விக்கெட் வீழ்த்துவதெல்லாம் ஒரு மேட்டரா? என்கிற ரீதியில் இருந்தது. இந்நிலையில், யுவராஜ் சிங்கின் டுவீட் குறித்து பேசியுள்ள ரவிச்சந்திரன் அஷ்வின், என்னுடைய டுவீட்கள் யாரையும் குறிப்பிடுவனையாக இருக்காது. அந்தவகையில் யுவராஜ் சிங்கின் டுவீட்டையும் அப்படித்தான் பார்க்கிறேனே தவிர, எங்களுக்கான மெசேஜாக பார்க்கவில்லை. யுவராஜ் சிங்கை நீண்டகாலமாக எனக்கு நன்றாக தெரியும். அவர் மீது எப்போதுமே பெரிய மரியாதை இருக்கிறது என்றார் அஷ்வின்.
 

click me!