காட்டடி அடித்து 2 ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்ட வெங்கடேஷ் ஐயர்..! 402 ரன்களை குவித்த மத்திய பிரதேச அணி

Published : Feb 28, 2021, 03:06 PM IST
காட்டடி அடித்து 2 ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்ட வெங்கடேஷ் ஐயர்..! 402 ரன்களை குவித்த மத்திய பிரதேச அணி

சுருக்கம்

விஜய் ஹசாரே தொடரில் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயரின் அபார சதத்தால் 403 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை நிர்ணயித்தது மத்திய பிரதேச அணி.  

விஜய் ஹசாரே தொடரில் மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி  இந்தூரில் நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய மத்திய பிரதேச அணியின் தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் தொடக்கம் முதலே அடித்து ஆடி ஸ்கோர் செய்தார். அபாரமாக ஆடிய வெங்கடேஷ் ஐயர், 146 பந்தில் 20 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 198 ரன்களை குவித்தார் வெங்கடேஷ் ஐயர்.

198 ரன்கள் அடித்த வெங்கடேஷ் ஐயர் இரட்டை சதமடிக்கும் அருமையான வாய்ப்பை 2 ரன்னில் தவறவிட்டு ரன் அவுட்டானார். ரன் அவுட்டாகவில்லை என்றால், இரட்டை சதமடித்து அசத்தியிருப்பார்.

மத்திய பிரதேச அணியில் ரஜாத் படிடார் மற்றும் ஆதித்ய ஸ்ரீவஸ்தவா ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். ரஜாத் 59 பந்தில் 54 ரன்களும், ஆதித்ய ஸ்ரீவஸ்தவா 56 பந்தில் 88 ரன்களும் அடிக்க, 50 ஓவரில் மத்திய பிரதேச அணி 402 ரன்களை குவித்தது.

இதையடுத்து 403 ரன்கள் என்ற மிகக்கடினமான இலக்கை பஞ்சாப் அணி விரட்டிவருகிறது.

PREV
click me!

Recommended Stories

இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!
வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!