#SLvsIND முதல் ஒருநாள் போட்டி: சஞ்சு சாம்சன் ஆடாதது ஏன்..? இதுதான் காரணம்

Published : Jul 18, 2021, 08:16 PM IST
#SLvsIND முதல் ஒருநாள் போட்டி: சஞ்சு சாம்சன் ஆடாதது ஏன்..? இதுதான் காரணம்

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் ஆடாதது ஏன் என்ற காரணம் வெளியாகியுள்ளது.  

இந்தியா - இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவரில் 262 ரன்களை குவிக்க, 263 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டிவருகிறது.

இந்த போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் அறிமுகமாகினர். விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகினார். இன்று அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் தான் விக்கெட் கீப்பராக ஆடியிருக்க வேண்டியது.

ஆனால் சஞ்சு சாம்சன் முழு ஃபிட்னெஸுடன் இல்லாத காரணத்தால் அவர் ஆடவில்லை. அதனால் தான் இஷான் கிஷன் வாய்ப்பு பெற்றுள்ளார். இஷான் கிஷனை விட சீனியர் வீரரான சஞ்சு சாம்சன், அவரது வாய்ப்புக்காக இன்னும் காத்திருக்க வேண்டியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!