தோனி ஏன் களத்தில் டென்சனே ஆகுறது இல்ல தெரியுமா..? இதுதான் காரணம் பாருங்க

By karthikeyan VFirst Published Aug 17, 2020, 10:17 PM IST
Highlights

தோனி எப்பேர்ப்பட்ட சூழலிலும் களத்தில் டென்சனே ஆகாமல் கூலாக கையாள்வார். அதற்கான காரணத்தையும் அந்த மௌனத்தின் பின்னணியில் உள்ள வலிமையும் உணர்த்தும் சம்பவத்தை பார்ப்போம்.
 

2007 டி20 உலக கோப்பை இந்திய அணிக்கு மிக முக்கியமான வெற்றி. இந்திய கிரிக்கெட் அணி புதிய அத்தியாயத்தில் காலெடுத்து வைத்த வரலாற்று சம்பவம் அது. 2007 ஒருநாள் உலக கோப்பையில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி, லீக் சுற்றுடன் வெளியேறியது. 

அந்த உலக கோப்பை தோல்வி, இந்திய அணிக்கு பெரும் அடியாக விழுந்தது. அந்த தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் டிராவிட் கேப்டன்சியிலிருந்து விலக, ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பை தோனி ஏற்றார். 

தோனியின் தலைமையில் ரோஹித் சர்மா, யூசுஃப் பதான், ராபின் உத்தப்பா, ஸ்ரீசாந்த், ஜோஹிந்தர் சர்மா என இளம் படையினர், 2007 டி20 உலக கோப்பையில் களம் கண்டனர். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி என்ற மூன்று மாபெரும் அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த சீனியர் வீரர்கள் இல்லாமல், ஆடிய இளம் இந்திய அணியின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. 

தோனி தலைமையிலான இளம் இந்திய அணி, அனுபவமான ஆஸ்திரேலியா, அதிரடி பாகிஸ்தான் ஆகிய அணிகளை எல்லாம் வீழ்த்தி டி20 உலக கோப்பையை வென்றது இளம் இந்திய அணி. அந்த வெற்றிக்கு பின்னர் இந்திய அணி அடைந்த பரிணாம வளர்ச்சி அபரிமிதமானது. அதன்பின்னர் 2011ல் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி என இந்திய அணிக்கு ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்தார் தோனி. 

தோனி கேப்டன்சியில் 2007 டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் சூழல் எப்படியிருந்தது குறித்து ஆங்கில ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றிடம் பேசியபோது, வீரர்கள் அழுத்தத்தையும் நெருக்கடியையும் உணராத அளவிற்கு உற்சாகப்படுத்தப்பட்டு கொண்டே இருப்பார்கள். நாம டென்சன் ஆகக்கூடாது; எதிரணிகளை டென்சனாக்க வேண்டும் என்று தோனி சொல்வார். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி கவலைப்படக்கூடாது. நமது பலம் என்னவோ அதில் கவனம் செலுத்த வேண்டும். அப்படியான அணி தான் அது என்று லால்சந்த் ராஜ்புத் தெரிவித்திருந்தார். 

இவரது கூற்றிலிருந்து தோனி டென்சன் ஆகக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. நாம் டென்சன் ஆனால், நம்மால் சரியான முடிவை எடுக்க முடியாது. அது எதிரணிக்கு சாதகமாக அமைந்துவிடும். எனவே எதிரணியை நாம் டென்சனாக்க வேண்டுமென்றால், நான் டென்சன் ஆகாமல் நிதானமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.
 

click me!