ஐபிஎல் 2020: எதிரணிகளை அல்லு தெறிக்கவிடும் முரட்டு பேட்டிங் ஆர்டர்.. கேகேஆர் அணியின் ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Mar 6, 2020, 5:13 PM IST
Highlights

ஐபிஎல் 13வது சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் உத்தேச ஆடும் லெவன் வீரர்களை பார்ப்போம். 
 

ஐபிஎல்லில் 12 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 13வது சீசன் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. கடந்த 2 சீசன்களிலும் தினேஷ் கார்த்திக்கின் தலைமையில் ஏமாற்றமடைந்த கேகேஆர் அணி, இந்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

கேகேஆர் அணி 2012 மற்றும் 2014 ஆகிய இரண்டு சீசன்களிலும் கவுதம் கம்பீரின் கேப்டன்சியில் ஐபிஎல் டைட்டிலை வென்றது. அதன்பின்னர் அந்த அணி கோப்பையை வெல்லவில்லை. 2018 மற்றும் 2019 ஆகிய இரண்டு சீசன்களிலும் தினேஷ் கார்த்திக்கின் ஆடிவருகிறது கேகேஆர் அணி. 

கடந்த சீசன் கேகேஆர் அணிக்கு அதிருப்திகரமானதாக முடிந்தது. ஆண்ட்ரே ரசலை தவிர வேறு யாருமே கடந்த சீசனில் சரியாக ஆடவில்லை. ஏற்கனவே வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டிருந்த கேகேஆர் அணி, இயன் மோர்கன், டாம் பாண்ட்டன் ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்களை ஏலத்தில் எடுத்துள்ளது. 

கேகேஆர் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான் பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்ட்ரே ரசல், இயன் மோர்கன், சுனில் நரைன், டாம் பாண்ட்டன் ஆகிய வெளிநாட்டு அதிரடி வீரர்களையும் ஷுப்மன் கில், நிதிஷ் ராணா ஆகிய இளம் திறமைகளையும் ஒருசேர கொண்டுள்ள கேகேஆர் அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

அந்த அணியின் தொடக்க வீரராக ஷுப்மன் கில் இறங்குவது உறுதி. அவருடன் சுனில் நரைன் அல்லது டாம் பாண்ட்டன் ஆகிய இருவரில் ஒருவர் இறங்குவார். மூன்றாம் வரிசையில் நிதிஷ் ராணா, மிடில் ஆர்டரில் தினேஷ் கார்த்திக், இயன் மோர்கன் ஆகியோர் ஆடுவார்கள். ஃபினிஷிங் பணியை செவ்வனே செய்து முடிப்பதற்கென்றே அவர்களிடம் ஆண்ட்ரே ரசல் இருக்கிறார். ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக, அந்த அணியால் அதிகமான தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட பாட் கம்மின்ஸ் ஆடுவார். ஸ்பின்னராக குல்தீப் யாதவ் இறங்குவார். மேலும் பவுலர்கள் பிரசித் கிருஷ்ணா, ஷிவம் மாவி மற்றும் நாகர் கோடி ஆகியோர் ஆடுவார்கள். 

Also Read - ஹர்பஜன் சிங்கின் ஆல்டைம் பெஸ்ட் டெஸ்ட் அணி.. மூன்றே மூன்று இந்திய வீரர்கள்.. ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலிய வீரர்கள்

கேகேஆர் உத்தேச அணி:

சுனில் நரைன்/டாம் பாண்ட்டன், ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக்(கேப்டன், விக்கெட் கீப்பர்), இயன் மோர்கன், ஆண்ட்ரே ரசல், பாட் கம்மின்ஸ், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, ஷிவம் மாவி, கமலேஷ் நாகர்கோடி. 
 

click me!