5 வீரர்களை கழட்டிவிட்ட சிஎஸ்கே.. தக்கவைத்த, தூக்கியெறிந்த வீரர்களின் ஃபுல் லிஸ்ட்

By karthikeyan VFirst Published Nov 16, 2019, 10:59 AM IST
Highlights

ஐபிஎல் 2020 சீசனுக்கு முன் சிஎஸ்கே அணி கழட்டிவிட்டுள்ள மற்றும் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை பார்ப்போம். 

ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளில் ஒன்று, தோனி தலைமையிலான சிஎஸ்கே. இதுவரை நடந்த 12 சீசன்களில் 3 முறை கோப்பையை வென்றுள்ளது. கடந்த சீசனிலும் கோப்பையை வென்றிருக்க வேண்டிய சிஎஸ்கே அணி, நூலிழையில் தவறவிட்டது. இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்று கோப்பையை இழந்தது. 

ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்திவரும் சிஎஸ்கே அணி, சீசனுக்கு சீசன் ஏகப்பட்ட மாற்றங்களை எப்போதுமே செய்ததில்லை. தோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ என கோர் டீம் மிகவும் வலுவாக இருப்பதால், அந்தந்த சீசனுக்கு அணியின் திட்டத்திற்கு ஏற்ப ஒரு சில வீரர்களை மட்டுமே கழட்டிவிடவோ அல்லது புதிதாக எடுக்கவோ செய்யுமே தவிர, தேவையற்ற மாற்றங்கள் எப்போதுமே சிஎஸ்கேவில் செய்யப்பட்டதில்லை. 

அந்தவகையில், 2020 சீசனுக்கான ஏலத்திற்கு முன்னதாக ஐந்து வீரர்களை மட்டும் சிஎஸ்கே அணி கழட்டிவிட்டுள்ளது. இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாம் பில்லிங்ஸ் மற்றும் ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி ஆகிய இருவரையும் சிஎஸ்கே கழட்டிவிட்டது. இவர்கள் தவிர மோஹித் சர்மா, த்ருவ் ஷோரே மற்றும் சைதன்யா பிஷ்னோய் ஆகியோரையும் சிஎஸ்கே கழட்டிவிட்டுள்ளது. 

சிஎஸ்கே தக்கவைத்த வீரர்கள்:

தோனி(கேப்டன்), ரெய்னா, டுப்ளெசிஸ், முரளி விஜய், ஜடேஜா, மிட்செல் சாண்ட்னெர், குஜ்ஜெலின், கேதர் ஜாதவ், அம்பாதி ராயுடு, நாராயண் ஜெகதீஷன், ஹர்பஜன் சிங், ஆசிஃப், ஷர்துல் தாகூர், ஷேன் வாட்சன், இம்ரான் தாஹிர், இம்ரான் தாஹிர், ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சாஹர், மோனு குமார், கரன் ஷர்மா. 

சிஎஸ்கே அணி எந்த வீரரையும் எந்த அணியுடனும் பரிமாறிக்கொள்ளவில்லை. 
 

click me!